உலக நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்படும் நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது, இதேவேளையில் பணவீக்கத்தைக் குறைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்துவதால் நிறுவனங்களுக்குக் கூடுதல் சுமை உருவாகியுள்ளது.
இதைச் சமாளிக்க ஏற்கனவே ஊழியர்கள் பணிநீக்கம், லாபம் அளிக்காத வர்த்தகத்தை மூடுதல், சேவைகளைக் குறைத்தல் எனச் செலவுகளைக் குறைக்கும் பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வேளையில் டெக் நிறுவனங்கள் மத்தியில் மும்மூர்த்திகளாகப் பார்க்கப்படும் பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இந்தப் பெரிய நிறுவனங்களை எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மெட்டா நிறுவனம்
பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டு உள்ள காலாண்டு முடிவுகளில் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 27.7 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் 29 பில்லியன் டாலர் அளவீட்டை ஒப்பிடுகையில் சுமார் 4 சதவீதம் சரிவாகும். இக்காலாண்டில் மெட்டா பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், வர்த்தகத்தை மூடியும் உள்ளது.
வருவாய் சரிவு
மெட்டா நிறுவனம் ஜூன் காலாண்டில் தான் வரலாற்றில் முதல் முறையாக 0.9 சதவீத வருவாய் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் காலாண்டில் 4 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும் இக்காலாண்டில் மெட்டா 4.40 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது, கடந்த ஆண்டு இதன் அளவு 9.19 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கணிப்பு
இந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் மெட்டா 30 - 32.5 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இதேபோல் நடப்பு ஆண்டின் மொத்த செலவுகளை 101 பில்லியன் டாலர் வரையில் செல்ல வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, முன்பு அதன் அளவை 87 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது.
மெட்டா பங்கு விலை சரிவு
இதன் எதிரொலியாக மெட்டா பங்கு விலை 5.59 சதவீதம் வரையில் சரிந்து 129.82 டாலராக உள்ளது, 2022ல் மட்டும் மெட்டா பங்குகள் 61.65 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் காலாண்டு வருவாய் கணிப்பையும் சர்வதேச பொருளாதாரத்தைப் பார்க்கும் போது மெட்டா பங்குகள் 100 டாலருக்குக் கீழ் சரிந்தாலும் வியப்பு அடையத் தேவையில்லை.
சுந்தர் பிச்சை-யின் கூகுள்
இதைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் செப்டம்பர் காலாண்டில் லாபமாக 13.9 பில்லியன் டாலரை பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 27 சதவீதம் குறைவாகும். இதேகாலகட்டத்தில் ஆல்பபெட் நிறுவனத்தின் வருவாய் 6 சதவீதம் உயர்ந்து 69.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆல்பபெட் விளம்பர விற்பனை
இக்காலக்கட்டதில் ஆல்பபெட் நிறுவனத்தின் விளம்பர விற்பனை அளவு 4 சதவீதம் உயர்ந்து 39.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இப்பிரிவில் 41 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் வரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் ஆல்பபெட் இதுவரை கட்டுப்படுத்தி வந்த பணிநீக்க நடவடிக்கையைக் கையில் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆல்பபெட் நிறுவன பங்கு விலை
நேற்று அமெரிக்க வர்த்தகச் சந்தை முடிவில் சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் நிறுவன பங்குகள் 9.14 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 94.93 டாலராக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் ஆல்பபெட் பங்குகள் 34.53 சதவீதம் வரையில் சரிந்து உள்ளது, நேற்றைய சரிவின் மூலம் ஆல்பபெட் நிறுவன பங்குகள் 100 டாலர் என்ற முக்கியப் பென்ச்மார்க் அளவீட்டை இழந்துள்ளது.
சத்ய நாடெல்லா-வின் மைக்ரோசாப்ட்
கடைசியாகச் சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் 50.12 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தையும் பெற்றுள்ளது. வருமான அளவில் சந்தை கணிப்புகளை மைக்ரோசாப்ட் உடைத்தாலும் லாப அளவுகளில் 14 சதவீத சரிவைப் பதிவு செய்து 17.56 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 3.3 பில்லியன் டாலர் அளவிலான வரிச் சலுகை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications