மன்னிப்பு கேட்பாரா மார்க்? 3 நாள் தான் கெடு..!! பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜக்கர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

ஜூலை 23 அன்று, நீட் வினாத்தாள் கசிவினை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து ஒரு வீடியோவை ரெக்கார்டு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பின்னர் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தார்.

மன்னிப்பு கேட்பாரா மார்க்? 3 நாள் தான் கெடு..!! பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்..!!

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ இரவு 12:30 மணி முதல் காலை 5:00 மணி வரை நீக்கப்பட்டிருந்தது. பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு அந்த வீடியோ மீண்டும் ஃபேஸ்புக்கில் திரும்ப வந்தது. இந்தியாவின் அதிகாரமிக்க ஒரு பதவியில் இருப்பவரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள வீடியோவையே ஃபேஸ்புக் அகற்றியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியின் வீடியோவை எப்படி நீக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த விவகாரத்தை மிக தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் அடுத்த 3 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது.

Also Read

முன்னதாக, மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் வீடியோ நீக்கத்திற்கு தொழில்நுட்ப கோளாறு மட்டுமே காரணம் என விளக்கம் அளித்தனர். ஆனால், இந்த விளக்கத்தை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரதிநிதியான பிரதமரின் வீடியோவை நீக்கியது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற குழு இதற்கு பொறுப்பான நபர்களை கண்டறிந்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

மார்க் ஜக்கர்பெர்க் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் அல்லது உத்தரவை மீறினால், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் மெட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மெட்டா நிறுவனத்தின் மீதும் அதன் உயர் அதிகாரிகள் மீதும் இந்தியாவில் நேரடியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படலாம்.

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மார்க் ஜக்கர்பெர்க் அடுத்த 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் தனது முக்கிய சட்டப்பூர்வ பாதுகாப்பை இழக்க நேரிடும். முன்னதாக மெட்டா குழுவினர் இந்தியா வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் மார்க் மன்னிப்பு கேட்டால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் போல தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+