சர்வதேச அளவில் சமுக வலைத்தளத் துறையைப் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தி வரும் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட காலமாக முதலீடு செய்து வருவதைத் தொடர்ந்து இப்போது ஆடு, மாடுகளை வளர்க துவங்கியுள்ளார். இதில் குறிப்பாக மாடு வளர்ப்புக் குறித்துத் தற்போது முக்கியமான பதிவை வெளியிட்டு உள்ளார்.
ஹூவாய் பகுதியில் இருக்கும் கவாய் தீவில் 2014 ஆம் ஆண்டு முதல் மார்க் ஜூக்கர்பெர்க் பல கட்டங்களாகச் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை வாங்கித் தற்போது பெரிய வீடு, பங்கர், காம்போட் சுவர்களைக் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கவாயில் உள்ள Ko'olau Ranch பண்ணையில் மாடுகளை வளர்க்கத் தொடங்கியுள்ளேன், உலகின் மிக உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மார்க் ஜூக்கர்பெர்க், நாங்கள் வாகியூ (wagyu) மற்றும் ஆங்குஸ் (angus) மாடுகளை வளர்க்கிறோம், இந்த மாடுகள் மக்காடமியா உணவைச் சாப்பிட்டு, பீர் குடித்து வளர்கிறது. மாடுகளுக்கான உணவையும், பீர்-ஐயும் பண்ணையிலேயே உருவாக்கப்பட்டு மாடுகளுக்குக் கொடுக்கப்படுவதாகவும் பெருமையுடன் கூறுகிறார் மார்க் ஜூக்கர்பெர்க்.
மேலும் ஒவ்வொரு மாடும் ஆண்டுக்கு 5,000-10,000 பவுண்டுகள் உணவை உண்ணும், அதனால் பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா பயிரிடப்பட்டு உள்ளன. என் மகள்கள் Ko'olau Ranch பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளைப் பராமரிப்பதற்கும் உதவுகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
மார்டன் உலகை விட்டு இயற்கை உடன் ஒன்றி வாழும் முறைக்கு மார்க் ஜூக்கர்பெர்க் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் பயணத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளதாகவும், ஒவ்வொரு சீசனிலும் அதை மேம்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும். தன்னுடைய வாழ்க்கையில் இதுதான் மிகவும் சுவையான திட்டமாக (Projects) உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு மாட்டு இறைச்சி மிகவும் விருப்பமான உணவாக உள்ளது. பீப்-ஐ ரசித்து, ருசித்துச் சமைப்பதில் அதிகளவிலான மெனக்கெடுவதில் அவர்களுக்குப் பெரிய விருப்பம் உள்ளது, பல மணிநேரம் பீப் இறைச்சியைச் சமைக்கும் முறை வெளிநாடுகளில் மிகவும் பிரபலம்.


Click it and Unblock the Notifications