சமுக வலைத்தளத்தில் எப்போதும் இல்லாத போட்டி உருவாகியிருக்கும் வேளையில் எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றும், அடுத்த தலைமுறைக்கான தளத்தை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் சமூக வலைத்தள நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
தற்போது சமுக வலைத்தள பிரிவில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் இருப்பது தான், இதேபோல் வர்த்தக மாடல்களையும் உறுதியான கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்த நிலையில் எதையாவது செய்து மேலே வர வேண்டும் என இலக்குடன் இருக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க், தற்போது சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டிவிட்டரை காப்பி அடித்து மெட்டா குழுமத்தில் இளம் தலைமுறையினர் அதிகம் இருக்கும் இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிதாக டிவிட்டரை போலவே ஒரு மைக்ரோபிளாகிங் சேவையை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
இதுக்குறித்த தகவல் mastdon பிரபலமான போதே வெளியானாலும் தற்போது இந்த தகவல் உறுதியானது மட்டும் அல்லாமல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே மார்க் ஜூக்கர்பெர்க் Barcelona என்ற பெயரில் டிவிட்டருக்கு போட்டியாக ஒரு மைக்ரோபிளாகிக் சேவையை இன்ஸ்டாகிராமில் கொண்டுவர பணியாற்றி வரும் வேளையில் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் தற்போது பெரிய அளவிலான வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர்களை இழந்து மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் எப்படியாவது வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக டிவிட்டரை காப்பியடிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் தளத்தில் 500 எழுத்துக்கள் அடங்கிய போஸ்ட்களை பதிவிடலாம், டிவிட்டரில் இருப்பது போல் இதிலும் Hashtags மற்றும் அதை சார்ந்த சேவைகள் இருக்கும் என அறியப்படுகிறது.
முதலில் இன்ஸ்டாகிராம்-ல் ஒரு சேவையாக இருக்கும் என கூறப்படும் நிலையில் பின்னாளில் தனிசேவையாக அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இந்த டிவிட்டர் தளம் decentralized social network தளமாக இருக்கும் என்றும், இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் 2024ல் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் இப்புதிய தளம் பெரிய அளவிலான தாக்கத்தை தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications