வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை இயக்கும் தொழில்நுட்ப ஜாம்பவான்களில் ஒன்றான மெட்டா (Meta) நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், தனது மனக்குமுறலை பிளைண்ட் தளத்தில் பகிர்ந்துள்ளார். வெறும் 24 வயதே ஆன அந்த ஊழியர், ஆண்டுக்கு சுமார் ரூ.3.2 கோடி சம்பளம் பெற்ற போதிலும், வேலையை தொடர முடியவில்லை என்றும் தன்னுடைய நிகர மதிப்பு 3 மில்லியன் டாலரைத் தொட்டவுடன் வேலையை விட்டு வெளியேற இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்த மெட்டா ஊழியர், தனது இளம் வயதில் இந்த அளவு செல்வத்தை ஈட்டியது பெரும் பாக்கியம் என்று கூறியுள்ளார். எனக்கு 24 வயது ஆகிறது. இப்போது எனது நிகர மதிப்பு 700,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5.8 கோடி) ஆக உள்ளது. இந்த இளைய வயதில் இதைப் பெற்றிருப்பது உண்மையில் ஒரு பாக்கியம் தான் என்று அவர் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த அதிகபட்ச சம்பளமும் வசதியும் இருந்தபோதிலும், வேலையின் மீதான ஆர்வம் முற்றிலும் குறைந்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், என்னால் வேலையை பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் வேலையைத் தொடருவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உடனே வேலையை விட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால், எனது குடும்பத்தின் தேவைகளுக்காகப் பணம் சம்பாதிக்கும் கடமையில் நான் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
தனது இலக்கான 3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.25 கோடி) அடைவதற்காக ஒவ்வொரு டாலரையும் சேமிக்கத் தான் போராடுவதாகவும், இந்தச் சோர்வான போராட்டம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று தெரியவில்லை எனவும் அந்த மெட்டா ஊழியர் கூறியுள்ளார். எனக்குள் எவ்வளவு காலம் தாங்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது ஒவ்வொரு டாலரையும் சேமிக்கப் போராடுவதாகவும், எனது நிகர மதிப்பு மெதுவாக அதிகரிப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உணர்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது மொத்த வருடாந்திர சம்பளம் சுமார் ரூ.3.2 கோடி என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவில், "நிகர மதிப்பு 1 மில்லியனைத் தொட்ட பிறகு நிலைமை எளிதாகுமா? இலக்கின் முடிவு தெரியுமா? எனது இலக்கு 3 மில்லியன் டாலர் " என்று அந்த ஊழியர் மற்றவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர் ஒருவர், "திரையில் தெரியும் எண்களைக் கண்காணிப்பதை நிறுத்துங்கள். இன்று தான் நீங்கள் இருக்கப்போகும் இளமையான மற்றும் ஆரோக்கியமான நாள். ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக மாற்றங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளார்.
அதற்கு அந்த மெட்டா ஊழியர், "ஏதோ ஒரு காரணத்தால் என்னால் அதைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. வேலை செய்வது, பணம் சேமிப்பது, சீக்கிரம் ஓய்வு பெறுவது... அதன்பிறகு வாழ்க்கையை அனுபவிப்பது பற்றியேதான் நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதிலளித்தார்.
இதற்கிடையே, ஒரு கூகுள் நிறுவன ஊழியர், "நீங்கள் இப்போதே வாழ்க்கையை அனுபவிக்க வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால், 35 வயதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட 3 மில்லியன் டாலர் இலக்கை அடைந்துவிட்டு, கடந்த 11 ஆண்டுகளாக நான் என்ன செய்தேன்? என்று நீங்களே கேட்டுக் கொள்வீர்கள். ஆனால், 1 மில்லியனுக்கு மேல் முதலீடு அதிகரிக்கும்போது கூட்டுவட்டி அதன் அற்புதத்தை நிகழ்த்தும்" என்று ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வு, அதிக சம்பளம் பெற்றாலும் வேலையில் திருப்தி இல்லாமல் அவதிப்படும் இளம் தொழில் வல்லுநர்களின் பொதுவான மன அழுத்தத்தைப் பிரதிலிப்பதாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications