உலகின் முன்னணி டெக் நிறுவனங்களான மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணிநீக்கம் செய்து வரும் வேளையில், உயர் அதிகாரிகளும், CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகள் மட்டும் அதிகப்படியான சம்பளத்தையும் போனஸ் தொகையும் பெற்று வருகின்றனர்.
பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளை குறைப்பதற்காக அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்துவரும் வேளையில் இது மட்டும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி அனைத்து ஊழியர்களிடமும் இருக்கிறது. சமீபத்தில் கூகுள் பணிநீக்கத்தை எதிர்த்து சக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்த நிலையில் தற்போது மெட்டா நிறுவன ஊழியர்கள் நேரடியாக மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ நேரடியாக கிழித்து தொங்கவிட்டு உள்ளனர். மெட்டா நிறுவனத்தின் விர்ச்சுவல் Q&A செஷனில் மார்க் ஜூக்கர்பெர்க்-யிடம் ஊழியர்கள் பணிநீக்கம் உச்சத்தில் இருக்கும் போது எப்படி மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் 6 இலக்க போனஸ் அளிக்கப்படுகிறது என கேட்டு உள்ளனர்.
கடந்த வாரம் மெட்டா நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) தாக்கல் செய்த அறிக்கையில் இந்த வருடம் நிர்வாக மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு எவ்வளவு போனஸ் மற்றும் சம்பளம் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் C-சூட் நிர்வாகிகள் அதாவது CXO பிரிவு அதிகாரிகள் அதிகப்படியான போனஸ் தொகையை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளதசு. மெட்டா தலைமை நிதி அதிகாரி சூசன் லி 575,613 டாலர் தொகையை போனஸைப் பெற்றார்; தலைமை தயாரிப்பு அதிகாரி கிறிஸ் காக்ஸ் 940,214 டாலர் தொகையை போனஸைப் பெற்றார்; தலைமை இயக்க அதிகாரி Javier Olivan; தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆண்ட்ரூ போஸ்வொர்த்; வியூக அதிகாரி (CSO) டேவிட் வென்னர் 712,284 டாலர் தொகையை போனஸைப் பெற்றனர். முன்னாள் COO ஷெரில் சாண்ட்பெர்க் 298,385 டாலர் தொகையை போனஸ் ஆக பெற்றுள்ளனர்.

மெட்டா நிறுவனத்திள் 20 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட முக்கிய காரணமாக இருக்கும் மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி நிறுவனத்தின் அதிகப்படியான EE/GE ratings கொடுக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு இவர்களுடைய பங்கு இல்லையா என்று ஒரு மெட்டா ஊழியர் மார்க் ஜூக்கர்பெர்க்-யிடம் நேரடியாக கேட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications