META நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்க அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, முதல் சுற்று பணிநீக்கம் போல் அல்லாமல் 2வது சுற்றில் முக்கிய மாற்றத்துடன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க் மார்ச் மாதமே அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடுமையான விதிமுறைகளை விடுத்து கடுமையாக பணியாற்ற விருப்பம் இருந்தால் மட்டுமே இருக்கவும், இல்லையெனில் வெளியேறலாம் என நேரடியாக தெரிவித்தார். இந்த நிலையில் ஏப்ரல் மாத துவக்கம் முதல் 2வது சுற்று பணிநீக்கம் குறித்து தகவல் வெளிவந்தாலும் இதுவரையில் எவ்விதமான அறிவிப்பும் யாருக்கும் வரவில்லை என இந்திய மெட்டா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவரான Lori Goler செவ்வாய்க்கிழமை டெக்னிக்கல் டீம்-ல் யாரெல்லாம் பணிநீக்கம் செய்யப்படுகிறார்களோ அவர்களுக்கு ஈமெயில் மூலம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டும் என மெட்டா ஊழியர்களுக்கு அனுப்பிய MEMO-வில் குறிப்பிட்டு உள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பொதுவாக மாஸ் பணிநீக்க அறிவிப்புகள் அனைத்தும் விடியர்காலையில் தான் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பும், அந்த வகையில் 2வது சுற்றில் பணிநீக்கம் செய்யப்படும் 4000 ஊழியர்களுக்கான அறிவிப்பு அமெரிக்க நேரப்படி காலை 3- 5 மணிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்டா ஊழியர்கள் கூறுகின்றனர். புதன்கிழமை இல்லாவிட்டால் இந்த வார இறுதிக்குள் கட்டாயம் பணிநீக்கம் அறிவிப்புகள் வெளியாகும்.
மெட்டா நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்கத்தில் 2 விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒன்று மெட்டா நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவரான Lori Goler தனது MEMO-வில் குறிப்பிட்டது போல் டெக்னிக்கல் டீம், மற்றொரு விஷயம் சமுக வலைத்தளத்தில் பேசுவது போல் கீழ் மட்ட ஊழியர்கள் அதாவது துவக்க நிலை ஊழியர்கள் இந்த சுற்றில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவில் META நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என அனைத்து முக்கிய சேவைகளும் இருப்பது மட்டும் அல்லாமல் மெட்டாவின் பெரிய டெக் டீம் இந்தியாவில் உள்ளது. டிசம்பர் 2022 முடிவில் மெட்டாவில் 86,482 ஊழியர்கள் இருந்துள்ளனர், இந்தியா பெரிய சந்தை என்பதாலும், டெக் அணி பெரியதாக இருக்கும் காரணத்தால் குறைந்தது 5- 10 சதவீத ஊழியர்கள் இந்தியாவில் இருக்கலாம்.

மெட்டா ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஐஐடி, ஐஐஎம் மற்றும் பிற முன்னணி கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளை நேரடியாக பணியில் சேர்த்து வரும் வேளையில், இளம் டெக் வல்லுனர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 2வது பணிநீக்க சுற்றில் இந்தியா ஊழியர்கள் அதிகம் பணிநீக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. இதேநேரத்தில் இந்தியாவில் புதிய தலைவர் வந்துள்ளதால் அதிக பணிநீக்கத்திற்கு வாய்ப்பு அதிகம்.
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா கடந்த சில வருடங்களாகவே கடுமையான போட்டி காரணமாகவும், சில தவறான முடிவுகள் காரணமாகவும் வர்த்தகம், வருவாயை இழந்து வருகிறது. இதற்கிடையில் சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் மெட்டா மொத்தமாக முடங்கியது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications