ஒரு ஆண்டுக்கு சம்பளமாக ரூ.3 கோடி பெற்றாலும் சில மெட்டா ஊழியர்கள் நிறுவனம் வழங்கிய மீல் கிரெடிட்டைத் தவறாக பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சில ஊழியர்கள் தங்களது மீல் கிரெடிட்டை பயன்படுத்தி டூத் பேஸ்ட், ஆக்னே பேட், ஒயின் கிளாஸ் போன்றவற்றை வாங்கியுள்ளனர். பிற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களைப் போலவே மெட்டாவும் அதன் அலுவலக ஊழியர்களுக்கு மீல் கிரெடிட்டை வழங்குகிறது.
மீல் கிரெடிட் என்பது நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் ஒரு சலுகையாகும். இது குறிப்பிட்ட வரம்பு வரை அதன் ஊழியர்களை உணவு வாங்க அனுமதிக்கிறது. அதாவது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட அளவுத் தொகையிலான உணவை வாங்கிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் கிரெடிட்டாகும். இதன் மூலம் அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள உணவகங்களிலோ இலவசமாக உணவை வாங்கிக் கொள்ளலாம்.

சிலிகான் வேலி தலைமையகம் போன்ற முக்கிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச உணவு கிடைக்கும். அதே சமயம் சிறிய அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு உபர் ஈட்ஸ் அல்லது கிரப்ஹப் மூலம் உணவைப் பெற கிரெடிட் வழங்கப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் சிறு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலை உணவுக்கு $20, மதிய உணவிற்கு $25 மற்றும் இரவு உணவிற்கு $25 என தினசரி கிரெடிட் வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த கிரெடிட்டை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்திய காரணத்தினால் 24 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
மீல் கிரெடிட்டைத் தவறாகப் பயன்படுத்திய ஊழியர்கள் மீது மட்டுமே நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் சிலர் தங்கள் வீடுகளுக்கும் உணவை டெலிவரி செய்ய கூறியிருக்கின்றனர். கண்டிப்பாக அலுவலகங்களில் மட்டுமே மீல் கிரெடிட் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் எப்போதாவது தவறாக பயன்படுத்திய ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது மிகவும் வினோதமாக உள்ளது என்று பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர் பிளைன்ட் ஆப்ஸில் பகிர்ந்திருந்தார். இந்த அப்ளிகேஷன் தங்களுடைய வேலை அனுபவங்களை பற்றி விவாதிக்கும் ஒரு பிளாட்பார்ம் ஆகும். இந்த முன்னாள் மெட்டா ஊழியர் தனக்கு வழங்கப்பட்ட மீல் கிரெடிட்டைப் பயன்படுத்தி டூத் பேஸ்ட் போன்ற தனிப்பட்ட பொருட்களுக்காக பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் பணியில் இருக்கும் போது அவருடைய ஆண்டு வருமானம் 3.3 கோடியாம்.
அதில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் ஏன் மீல் கிரெடிட்டை பயன்படுத்தி பிற பொருட்களை வாங்கினர் என்பதையும் கூறியுள்ளனர். அவர்கள் அலுவலகத்தில் சாப்பிடாத நாட்களில் அதாவது தங்கள் மனைவி சமைத்து இருந்தாலோ அல்லது நண்பர்களுடன் சாப்பிட்டாலோ அன்றைய நாள் வழங்கப்படும் மீல் கிரெடிட்டை வீணாக்குவதை விட அதை வேறு விஷயத்திற்காக பயன்படுத்தலாம் என்று கருதி அதை பிற பொருட்கள் வாங்க பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து HR அவர்களிடம் விசாரித்த போது செலவு செய்தவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக இவர்கள் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications