இனி இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணமா? மெட்டா நிறுவனத்தின் புது "Instagram Plus" பிளான்! வெறும் ரூ.299 மட்டுமே!

இன்றைய இளைய தலைமுறையினர் காலையில் எழுந்து, பிற விஷயங்களைச் செய்கிறார்களோ இல்லையோ.. உடனே மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராம் பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். சோசியல் மீடியா தளங்களிலேயே இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான ஆப் என்றே சொல்லலாம். ரீல்ஸ் பார்ப்பது, ரீல்ஸ் அப்லோடு செய்வவது, நண்பர்களுடன் சேட் செய்வது என பல அம்சங்கள் இதில் இருக்கிறது. இதனால் மக்களையும் இன்ஸ்டாகிராமையும் பிரிக்க முடியாத சூழலே நிலவுகிறது.

அதற்கு ஏதுவாக மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை கொடுத்துள்ளது. அதிநவீன கூடுதல் வசதிகளுடன் கூடிய "இன்ஸ்டாகிராம் பிளஸ்" என்ற புதிய சபஸ்கிரிப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதை விரும்புபவர்கள் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி இன்ஸ்டாகிராம் பிளஸ்-ற்க்கு மாறலாம்.

அப்படியானால் இனி இலவசம் இல்லையா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். நாம் தற்போது வரை பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் அப்படியேதான் இருக்கும். இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தேடுபவர்கள் இந்த இன்ஸ்டாகிராம் பிளஸ் என்ற புதிய கட்டண முறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பிளஸ் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்த மாதம் ரூ. 299 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க விருப்பத்தேர்வு தான். உங்கள் விருப்பத்தின் பேரில் செலுத்திக் கொள்ளலாம். தேவைப்படாதவர்கள் அப்படியே இன்ஸ்டாகிராமை இலவசமாக பயன்படுத்தலாம்.

இனி இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணமா? புது

இன்ஸ்டாகிராம் பிளஸ்-இல் பயனர்களுக்கு கிடைக்கும் அம்சங்கள்: இதில் பல வசதிகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலாவதாக இலவசமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்காத சில பிரிமியம் டூல்ஸ் கிடைக்கும். உங்கள் அக்கவுண்டின் ரீச் எப்படி இருக்கிறது?, நீங்கள் போடும் போஸ்ட் எத்தனை பேரை சென்றடைந்திருக்கிறது? என்ற புள்ளி விவரங்களை துல்லியமாக பார்க்கலாம். அதோடு ஒவ்வொரு முறையும் அப்ளிகேஷனில் அப்டேட் செய்யும் போது புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இது போன்ற வசதிகளையும் நீங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இலவசமாக பயன்படுத்துபவர்களை விட கட்டணம் செலுத்தி பயன்படுத்துபவர்களுக்கு புதிய அம்சங்கள் உடனே கிடைக்குமாம். உங்களுடைய ப்ரொபைலை நீங்களே அழகாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்கென சில கண்ட்ரோல் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

வெப்சைட்டில் தனித்தனி டெம்ப்லேட்டுகள் இருப்பதைப் போல உங்களுடைய வசதிக்கு ஏற்ப அக்கவுண்ட்டை கஸ்டமைஸ் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இன்று பல இன்ஃப்ளேன்ஸர்களுக்கு இன்ஸ்டாகிராம் முக்கிய வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே தங்கள் அக்கவுண்டு குறித்த சரியான தகவல்களை, சரியான நேரத்தில் தெரிந்து கொண்டு கண்ட்ரோல் செய்ய விரும்பும் பயனர்களுக்காக இந்த பிளஸ் சபஸ்கிரிப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு கூறியதைப் போல் இலவசமாக பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. பிளஸ் சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாற நினைப்பவர்கள் இன்ஸ்டாகிராம் ஆப் மூலமாகவே பணம் செலுத்தி பிளஸ் உறுப்பினராக மாறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+