பேஸ்புக்-இன் தாய் நிறுவனமான Meta, தனது முக்கிய சமுக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் Threads இல் அரசியல் தொடர்பான கன்டென்ட்-களை காட்டுவது தொடர்பான கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது.
இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்கொள்ள உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சமுக வலைத்தளம் முக்கிய பிரச்சார கருவியாக விளங்குகிறது.

இந்த முக்கியமான சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் Threads இல் அரசியல் தொடர்பான கன்டென்ட்-களை காட்டுவது தொடர்பான கொள்கை மாற்றத்தை மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி வெள்ளிக்கிழமை பதிவிட்ட த்ரெட்ஸ் பதிவின் மூலம் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனம், இனி எப்போதும் போல் பயனர்களுக்கு அரசியல் தொடர்புகளான தரவுகளைத் தீவிரமாக விளம்பரப்படுத்தாது என்று அந்த பதிவின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் Threads பயனர்கள் அவர்கள் பின்தொடரும் கணக்குகளில் இருந்து அரசியல் தொடர்பான பதிவுகள் வந்தாலும், அத்தகைய உள்ளடக்கத்தைக் காட்டுவதை நிறுத்திவிடும் என்று மொசெரி தெளிவுபடுத்தினார்.
இது அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளது, இதன் மூலம் மெட்டாவின் அல்காரிதம் கன்டென்ட் பரிந்துரைக்கும் முறை பப்ளிக் கணக்குகளுக்குப் பாதிக்கும்.
குறிப்பாக, இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் மற்றும் எக்ஸ்ப்ளோர், த்ரெட்களில் பரிந்துரைக்கும் முறை கடுமையாகப் பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த கட்டுப்பாட்டைத் தாண்டி ஒரு பயனர் அரசியல் தொடர்பான தகவல்களை பார்க்க விரும்பினால் அவர்களுக்கு ஒரு வழியை கொடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் Threads பயனர் கன்டென்ட் டேப்-க்கு சென்று, அரசியல் கன்டென்ட்-களை தேர்வு செய்து, அங்கு Don't Limit அல்லது Limit ஆகியவற்றைத் தேர்வு செய்துகொள்ள முடியும் என தெரிவித்தார். இந்த முறை பேஸ்புக்கிலும் விரைவில் வரும் என தெரிகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற முக்கியமான சமுக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா-வின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் இந்த ஒரு விஷயம் தாழ். மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை பிப்ரவரி 2 ஆம் தேதி தடாலடியாக 22 சதவீதம் வரையில் உயர்ந்தது மூலம் இவருடைய சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் சுமார் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து அவருடைய மொத்த சொத்து மதிப்பு தற்போது 168 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் ஹூவாய் பகுதியில் இருக்கும் கவாய் தீவில் 2014 ஆம் ஆண்டு முதல் மார்க் ஜூக்கர்பெர்க் பல கட்டங்களாகச் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை வாங்கித் தற்போது பெரிய வீடு, பங்கர், காம்போட் சுவர்களைக் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது ஹவாயில் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பில் 1400 ஏக்கர் நிலத்திற்குச் சுற்றுச்சுவர் கட்டவும், ஒரு நிலத்தடி பதுங்கு கட்டமைப்பு (BUNKER), இந்தப் பங்கரில் உணவு மற்றும் எனர்ஜி ஆதாரங்கள் உடனும் கட்டமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications