கூகுள், அமேசான் தொடர்ந்து.. மெட்டா எடுத்த முடிவால் ஆடிப்போன டெக் ஊழியர்கள்..!!

டெக் துறையில் தற்போது பணிநீக்கத்தை தாண்டி ஊழியர்களுக்கு தானாக முன்வந்து வெளியேறும் வாய்ப்பு அதிகளவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஊழியர்களின் மனநிலை, குடும்ப சூழ்நிலை, எதிர்கால திட்டம் ஆகியவைற்றை கருத்தில் கொண்டு வெளியேற யோசிக்கும் ஊழியர்களை வேகமாக வெளியேறவும், செலவுகளை குறைக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கும் டெக் நிறுவனங்களுக்கு இந்த voluntary exit package முக்கியமான ஆயுதமாக விளங்குகிறது.

கூகுள், அமேசான் தொடர்ந்து.. மெட்டா எடுத்த முடிவால் ஆடிப்போன டெக் ஊழியர்கள்..!!

ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் இத்தகைய திட்டத்தை அறிவித்திருக்கும் வேளையில் தற்போது புதிதாக மெட்டா இதில் இணைந்துள்ளது. முதல் முறையாக இத்தகைய திட்டத்தை அறிவித்திருக்கும் மெட்டா, பிரான்ஸ் நாட்டின் வர்த்தகத்தை டார்கெட் செய்து இந்த பணநீக்கத்தை கையில் எடுத்துள்ளது, இத்திட்டத்தின் கீழ் 100 - 300 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டு உள்ளது.

ஊழியர்களை வெளியேற்றுவது தொடர்பாக மெட்டா நிர்வாகம் தற்போது ஊழியர்களுக்கான யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரான்ஸ் ஊழியர்கள் சட்டத்தின் கீழ் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிடும் நிறுவனம் யூனியன் அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை ஊழியர்கள், எந்த பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறது.

இதேபோல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எத்தகைய நிதி தொகுப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. தற்போது வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு ஒரு வருட பணிக்கு 2.15 மாத சம்பளத்தை Severance pay ஆக கொடுக்க தயாராகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்ட பின்பு voluntary exit package-ஐ உலகளவில் அனைத்து ஊழியர்களுக்கும் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. தற்போது மெட்டா அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என உலகில் பல நாடுகளில் சுமார் 65000 ஊழியர்களை கொண்டு இருக்கும் இதேவேளையில் ஏஐ-க்காக அதிகளவில் செலவு செய்து வரும் காரணத்தால் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும் டெக் ஊழியர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற திட்டமிடும் வேளையில் voluntary exit package அறிவிக்கப்பட்டால், இதை பயன்படுத்திக்கொண்டு வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் அமேசான் 60000 ஊழியர்களை வெளியேற்றுவவதற்காக voluntary exit package திட்டத்தை அறிவித்து, ஆனால் கூகுள் வெளியேற்றப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையை வெளியிடாமல் ஜூன் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+