சமீபகாலமாக லேஆப் எனப்படும் ஊழியர் பணி நீக்கங்கள் பரவலாக இருந்து வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. அந்த வகையில், மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இது பெரிய அளவிலான நிறுவன பணிநீக்கம் போலல்லாமல், நிறுவனத்தில் சில மாற்றங்கள் நடக்கவிருப்பதாக மெட்டா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறிப்பிட்ட சில அணிகளில் மறுகட்டமைப்பு செய்ய நீண்ட கால இலக்குகள் மற்றும் பதவிகளை சீரமைக்க இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

மெட்டா செய்தித் தொடர்பாளர் டேவ் அர்னால்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சில குழுக்களை வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்துவது மற்றும் சில ஊழியர்களை வெவ்வேறு பதவிகளுக்கு மாற்றுவது ஆகியவை நடக்கும் எனவும், அப்படி சில ஊழியர்கள் நீக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மற்ற வாய்ப்புகளைக் கண்டறியவும் கடினமாக உழைப்போம் என அவர் கூறியுள்ளார். அதேபோல், மெட்டா எத்தனை ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போகிறது என்பதை வெர்ஜ் அறிக்கை வெளியிடவில்லை, ஆனால் பணிநீக்கங்கள் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்திலும் பணிநீக்கங்கள் நடந்துள்ளன:மெட்டா சமீபத்தில் தனது லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் சுமார் இரண்டு டஜன் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிக்கை வெளிட்டது. அதில், ஊழியர்கள் தங்கள் தினசரி 25 அமெரிக்க டாலர் உணவு கிரெடிட்களை முகப்பரு பேட்கள், ஒயின் கிளாஸ்கள் மற்றும் சலவை சோப்பு உள்ளிட்ட வீட்டுப் பொருட்களை வாங்குவதற்காக வரவுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தவறாகப் பயன்படுத்தியதால் இது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த பணிநீக்கம் கடந்த வாரம் நடந்ததாக கூறப்படுகிறது.
2022 முதல் 21,000 ஊழியர்கள் பணிநீக்கம்:2022 ஆம் ஆண்டிலிருந்து மெட்டா சுமார் 21,000 வேலைகளை குறைத்துள்ளது. 2022 முதல், தொற்றுநோயைத் தொடர்ந்து மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சியின் காரணமாக 11,000 பணிநீக்கங்களுடன் தொடங்கி, Meta அதன் ஊழியர்களை குறைத்து வருகிறது.
2023 இல், மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட திறனுக்கான ஆண்டு திட்டத்தின் கீழ் மேலும் 10,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் மெட்டாவின் த்ரெட்ஸ் குழுவில் சேருவதற்கு முன், அறிவிக்கப்படாத ஆப்ஸ் அம்சங்களை வெளிப்படுத்தியதற்காக ஜேன் மன்சுன் வோங் போன்ற சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்த செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
சமீபத்திய மெட்டா வெளியிட்ட இரண்டாம் காலாண்டு முடிவுகளில், சிறப்பான வருவாயை ஈட்டியுள்ளது. இது மூன்றாம் காலாண்டிற்கான ஒரு சிறந்த விற்பனை முன்னறிவிப்பாக இருக்கும். இதன்மூலம் மெட்டா சமூக ஊடக தளங்களில் வலுவான டிஜிட்டல்-விளம்பரச் செலவுகள் அதன் செயற்கை நுண்ணறிவு முதலீடுகளின் செலவை ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மெட்டா பங்குகள் 60% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications