பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமுகவலைத்தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏப்ரல் 19 ஆம் தேதி 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க் ஏற்கனவே 11000 ஊழியர்களை மெட்டா நிறுவனத்தின் கீழ் இருக்கும் அனைத்து கிளை நிறுவனங்களிலும் பணிநீக்கம் செய்யவுள்ள வேளையில், 2வது சுற்று பணிநீக்கம் இருக்கும் என பல வாரங்களுக்கு முன்பே நிறுவனத்தின் நிதி நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தெரிவித்தார்.

ஆனால் எப்போது பணிநீக்கம் இருக்கும் என்பதை அறிவிக்காமல் இருந்த நிலையில் ஏப்ரல் 19 ஆம் தேதி காலையில் பணிநீக்கம் அறிவிப்பை வெளியிடலாம் என இரு முக்கிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட்டாவின் இந்த 2வது பணிநீக்க சுற்றை layoffs Wednesday என சத்தரிக்கும் வெளிநாட்டு பத்திரிக்கைள், இந்த சுற்றில் குறைந்தது 4000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாத துவக்கத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் அனைத்து உயர் அதிகாரிகளிடம் பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் லிஸ்ட் தயாரிக்க கூறியது மட்டும் அல்லாமல் உயர்மட்ட அதிகாரிகள் இனி நிர்வாக பணிகளை மட்டுமே செய்ய கூடாது களத்தில் இறங்கி ஊழியர்கள் உடன் பணியாற்ற வேண்டும் இல்லையெனில் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் டிவிட்டர், BLIND ஆப்களில் மெட்டா நிறுவனத்தின் 4000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து தான் அதிகம் பேச்சப்பட்டு வருகிறது. இந்த பணிநீக்கத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் தான் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.

மெட்டாவின் 2வது பணிநீக்க சுற்றில் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் இந்தியா, பிரிட்டன் என உலகின் முக்கியமான சந்தைகள் அனைத்திலும் பணிநீக்கம் இருக்கும் என கூறப்படுவது மட்டும் அல்லாமல் இந்த பணிநீக்க அறிவிப்புகள் அடுத்த வாரத்திற்குள் முடிக்கப்படவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications