பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற உலகின் முன்னணி சமுக வலைத் தளங்களைக் கொண்டுள்ள மார்க் ஜூக்கப்பெர்க்-ன் மெட்டா பிளாட்பார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை டிக்டாக், யூடியூப் ஆதிக்கத்தின் காரணமாகச் சரிந்துள்ளது.
இதனால் நடப்புக் காலாண்டில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மட்டும் அல்லாமல் வருவாயும் குறையும் என மெட்டா நிறுவனம் நடப்பு காலாண்டுக்கான கணிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் அதிர்ச்சி அடைந்த மெட்டா முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கினர்.
மெட்டா பிளாட்பார்ம்ஸ்
அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் பார்த்திடாத வகையில் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் மெட்டா பிளாட்பார்ம்ஸ் ஓரே நாளில் சுமார் 200 பில்லியன் டாலருக்கு அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது.
200 பில்லியன் டாலர் இழப்பு
இந்த மாபெரும் சரிவுக்குச் சக போட்டி நிறுவனங்கள் தான் காரணம் என்பது தான் மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகவும், மெட்டா நிறுவனத்தின் வலிமையற்ற நிலையைக் காட்டுகிறது. 2012ஆம் ஆண்டில் பங்குச்சந்தைக்குள் வந்த பேஸ்புக் நிறுவனத்தின் மிகவும் மோசமான சரிவு இது.
மார்க் ஜூக்கர்பெர்க்
இதேவேளையில் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பும் பெரிய அளவில் நேற்று குறைந்துள்ளது. மார்க்-ன் சொத்து மதிப்பில் அதிகளவில் மெட்டா பங்குகளை நம்பியிருக்கும் காரணத்தால் மெட்டா பங்குகள் 26 சதவீதம் சரிந்த நிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் சுமார் 29.7 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி
இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் முன்னேறி மார்க் ஜூக்கர்பெர்க் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
பணக்காரர்கள்
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மார்க் ஜூக்கர்பெர்க் 29.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த நிலையில், அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் 11.8 பில்லியன் டாலரை இழந்துள்ளார். LVMH நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் 4.8 பில்லியன் டாலரை இழந்துள்ளார்.
இணை நிறுவனர்
மேலும் மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர்களான டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் 4.3 பில்லியன் டாலரும், எட்வர்டோ சவெரின் 4.6 பில்லியன் டாலரும் இழந்துள்ளனர். மெட்டா பங்குகளின் 26 சதவீத சரிவு அமெரிக்கச் சந்தையின் ஒட்டுமொத்த டெக் துறையைப் பாதித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications