உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் இருந்து பணிநீக்கம் செய்து வந்தாலும் தொடர்ந்து, வர்த்தகம், வருமானம் குறையும் காரணத்தால் இன்னும் நிலையான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.
மேலும் பல டெக் நிறுவனங்கள் செலவுகளைக் கூடுதலாகக் குறைக்க 2வது, 3வது சுற்றுப் பணிநீக்கத்திற்குத் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா-வில் இருக்கும் அனைத்து மேனேஜர்கள் மற்றும் டைரக்டர் பதவிகளில் இருப்பவர்கள் தனிநபராக அவர் அவர் வேலையில் பங்களிக்க வேண்டும் இல்லையெனில் பணியை விட்டு வெளியேறுங்கள் என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா பிளாட்பார்மஸ் 2022 ஆம் ஆண்டில் 12000 ஊழியர்களை ஓரே நேரத்தில் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது நிறுவனத்தில் இருக்கும் அனைத்து மேனேஜர் மற்றும் டைரக்டர் புதவிகளில் இருப்பவர்களை வெறும் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்யாமல்...
கோடிங், டிசைன்
தனிநபராக அவர் அவர் வேலையில் பங்களிக்கும் வகையில், கோடிங், டிசைன் போன்று அவர் பணியாற்றும் பிரிவில் கூடுதலான பங்களிப்பு அளிக்க வேண்டும் இல்லையெனில் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுங்கள் என மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளார்.
மெட்டா பிளாட்பார்மஸ்
மெட்டா பிளாட்பார்மஸ் மொத்தமாகத் திறமைமிக்க அமைப்பாக மாறி வரும் வேளையில், நிறுவனத்தில் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகையை flattening ஸ்டக்ச்சரை மார்க் ஜூக்கர்பெர்க் இந்த அறிவிப்பை மிகவும் கடுமையாக எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளார்.
டைரெக்டிவ் ரிப்போர்ட்
இது மட்டும் அல்லாமல் மேனேஜர் மற்றும் டைரக்டர் புதவிகளில் இருப்பவர்கள் இனி வரும் காலக்கட்டத்தில் எப்போதும் அனுப்பும் பர்பாமென்ஸ் ரிவ்யூவ் அறிக்கை உடன் டைரெக்டிவ் ரிப்போர்ட் அதாவது அவர்களுடைய தனிநபர் பங்களிப்பு என்ன என்பதை விளக்கும் அறிக்கைய சமர்ப்பிக்க உத்தரவு வெளியாகியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
பணி சுமை
மெட்டா பிளாட்பார்மஸ் 2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் ஊழியர்களுக்கு அதிகப்படியான பணிச் சுமை, டைட் டெட்லைன் அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. தற்போது இந்த நெருக்கடியை உயர் மட்ட அதிகாரிகளும் எதிர்கொண்டு வருகின்றனர்.
மார்க் ஜூக்கர்பெர்க் 2023 திட்டம்
மேலும் மார்க் ஜூக்கர்பெர்க் 2023 ஆம் ஆண்டு என்பது மெட்டா பிளாட்பார்மஸ்-க்கு Year of Efficiency என்ற பெயரிட்டு உள்ளார். மேலும் நிறுவனத்தின் Efficiency-ஐ அதிகரிக்க மிடில் மேனேஜர்-களை மொத்தாக நீக்கியுள்ளது, இதேபோல் வருமானம் மற்றும் வளர்ச்சியை அளித்ததாகப் பல திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சோஷியல் மீடியா
மெட்டா பிளாட்பார்மஸ் எப்படிச் சோஷியல் மீடியா மூலம் ஒட்டுமொத்த இண்டர்நெட் உலகை மாற்றியதோ, இதேபோல் மெட்டாவெர்ஸ் மூலம் டெக் மற்றும் விர்ச்சுவல் உலகை மாற்ற வேண்டும் என்பதற்காகப் பேஸ்புக் நிறுவனத்திற்குத் தாய் நிறுவனமாக மெட்டா பிளாட்பார்ம்ஸ் என்னும் நிறுவனத்தை உருவாக்கி, இதன் கீழ் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைத் துணை நிறுவனங்களாக மாற்றியது.
மெட்டாவெர்ஸ்
இந்த மாற்றத்திற்குப் பிறகு மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தில் அதிகளவில் கவனம் செலுத்த துவங்கினார். இதேவேளையில் சமூகவலைத்தளத்திலும் வீடியோ வாயிலான எண்டர்டெயின்மென்ட்-ல் பெரும் மாற்றம் உருவானது. இதில் மெட்டா தனது வாடிக்கையாளர்களை டிக்டாக் மற்றும் யூடியூப் ஷாட்ஸ் தளத்திற்கு இழந்தது. இங்கு இருந்து தான் மெட்டாவின் வீழ்ச்சி துவங்கியது.
மெட்டா பிரிவு
ஆனால் மார்க் ஜூக்கர்பெர்க் பெரும் முதலீட்டை செய்து உருவாகி வரும் மெட்டா பிரிவு தொழில்நுட்பம் பெரிய டெக் வல்லுனர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற காரணத்தால், இதுவும் பெரும் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications