பேஸ்புக்-கின் தாய் நிறுவனமான மெட்டா பிளார்ட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் அதன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 11,000 பேருக்கு மேலாக பணி நீக்கம் செய்துள்ளது.
இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். முன்னதாக சில தினங்களாக ட்விட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கம் பேரதிர்ச்சியினை கொடுத்துள்ளது.
இது உலகம் முழுக்க டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
மார்க் ஜூக்கர்பெர்க் கருத்து
மெட்டா நிறுவனத்தின தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், அதன் மொத்த ஊழியர்களில் 13% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது அந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது குறித்து மார்க் ஜுக்கர்பெர்க், இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதனால் நான் மிகவும் வருத்தப்படுகின்றேன். என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார்.
விசா மூலம் பணியாற்றுகிறீர்களா?
மேலும் அமெரிக்காவில் ஹெச் 1பி விசா மூலம் பணியாற்றி வரும் ஊழியர்களும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எனக்கு தெரியும் நீங்கள் இங்கு விசா மூலம் பணியாற்றுகிறீர்கள் எனில், இது உங்களுக்கு எவ்வளவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் நிறுவனம் உதவும். உங்களுக்கு எங்களது சிறப்பு குடியேற்ற அதிகாரிகள் உதவுவார்கள் என தெரிவித்திருந்தார்.
2 நாட்களில் பணி நீக்கம்
இதற்கிடையில் ஐஐடி-யன் ஒருவர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் மெட்டா நிறுவனத்தின் மிகப்பெரிய பணி நீக்கம் பற்றி பதிவிட்டுள்ளார்.
ஹிமான்ஷு வி (Himanshu.V)- ஹைத்ராபாத்தினை சேர்ந்தவர் என்பது அவரது லிங்க்ட் பக்கத்தில் தெரிகிறது.
நான் மெட்டாவில் சேர்வதற்காக கனடாவுக்கு இடம் பெயர்ந்தேன். சேர்ந்த 2 நாட்களுக்குப் பிறகு, பெரும் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டதால் எனது பயணம் முடிவுக்கு வந்தது.
ஏதேனும் வாய்ப்பிருந்தா சொல்லுங்க
தற்போது கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் அனைவருக்கும் என் இதயம் செல்கிறது. உண்மையாக அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ஆவலுடன் இருக்கிறேன். சாப்ட்வேர் பொறியாளருக்கான ஏதேனும் வாய்ப்பு உங்களுக்கு தெரிந்தால் எனக்கு கூறுங்கள். (அதில் கனடா அல்லது இந்தியா) என பதிவிட்டுள்ளார்.
ஆட்குறைப்பு பட்டியல்
ஐஐடி காரக்பூரை பட்டதாரியான ஹிமான்ஷுவுக்கு பலரும் வேலை வாய்ப்புகள் இருக்கும் நிறுவனங்களின் லிங்கிட்-ல் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் இந்த விஷயங்கள் எப்படி நடக்கின்றன என எனக்கு தெரியவில்லை. 2 நாட்களுக்கு பிறகு ஒருவரை பணி நீக்கம் செய்வதற்காக ஒருவரை நாடு விட்டு நாடு செல்வது நிறுவனத்திற்கு எப்படி தெரியாது? எப்படியும் சில வாரங்கள் முன்னதாக அவர்களின் ஆட்குறைப்பு பட்டியல் தயாராக இருந்தது.
யாரேனும் உதவுவார்கள்
குறைந்தது சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்த பட்டியல் தயாராக இருந்திருக்கலாம். நான் உன்னை உணர்கிறேன். நானே உன்னை உணர்கிறேன் நண்பரே. நானும் இதே நிலையில் தான் இருக்கிறேன். பாசிட்டிவ் ஆக இருங்கள். எங்காவது யாராவது நமக்கு உதவுவார்கள் என பதிவிட்டுள்ளார்.
ஏராளமான பணி நீக்கம்
கொரோனா காரணமாக ஏராளமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், தொழில் நுட்ப நிறுவனங்களில் ஏராளமான பணி நீக்கம் வந்துள்ளது. இன்னும் எத்தனை எத்தனை ஊழியர்கள் இது போல் பாதிக்கப்பட்டுள்ளார்களோ தெரியவில்லை..
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications