பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை சியாட்டில் மற்றும் வாஷிங்டனில் உள்ள பெல்லூவ் பகுதியில் உள்ள அலுவலகங்களை அடுத்தடுத்து காலி செய்து வருகிறது.
தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வரும் மாற்றம் மற்றும் அலுவலக ரியல் எஸ்டேட் சந்தையில் உருவாகியுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக அலுவலகங்கள் அடுத்தடுத்து காலி செய்யப்பட்டு வருகிறது.
டிவிட்டர்
சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்தது பெறும் சர்ச்சையான நிலையில் தற்போது அடுத்தடுத்து மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பகுதியான சியாட்டில் மற்றும் வாஷிங்டன் பகுதியில் இருக்கும் அலுவலகங்களைக் காலி செய்து வருகிறது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனம் சியாட்டில் டவுன்டவுன் பகுதியில் இருக்கும் ஆறு-அடுக்கு ஆர்பர் பிளாக் 333 மற்றும் பெல்லூவில் உள்ள ஸ்பிரிங் மாவட்டத்தின் 11-அடுக்கு பிளாக் 6-ல் உள்ள தனது அலுவலகங்களைத் துணைக் குத்தகைக்கு விட உள்ளதாக வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
அலுவலகக் குத்தகை
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் சமூக ஊடக நிறுவனமான மெட்டா மென்லோ பார்க் பகுதி மற்றும் சியாட்டில் பகுதியில் இருக்கும் அலுவலகக் கட்டிடங்களுக்கான குத்தகைகளையும் மதிப்பாய்வு செய்து வருவதாக்கத் தெரிவித்துள்ளது.
அலுவலக ரியல் எஸ்டேட்
அமெரிக்காவில் வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்கள் நடந்துள்ள நிலையில் அலுவலக ரியல் எஸ்டேட் தற்போது soft market ஆக மாறியுள்ளது. இது பொருளாதாரச் சுழற்சியின் ஒரு கட்டமாகும், இந்தச் சூழ்நிலையில் வாங்குபவர்களைக் காட்டிலும் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
பொருளாதார மந்தநிலை
இதைவிட முக்கியமாகச் சந்தையில் அதிகப்படியான அலுவலங்கள் விற்பனைக்கும் குத்தகைக்கு இருக்கும் காரணத்தால் குறைவான விலையில் அலுவலகக் கட்டிடத்தைப் பெற முடியும். இது அமெரிக்காவைப் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளும் ஒரு சிக்னல் ஆகப் பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட்
ரெட்மாண்ட் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மைக்ரோசாப்ட்-க்குப் பெல்லூவ் பகுதியில் உள்ள 26-அடுக்கு சிட்டி சென்டர் பிளாசா குத்தகை ஒப்பந்தம் ஜூன் 2024 முடிய உள்ள நிலையில் இதைப் புதுப்பிக்க மாட்டோம் என்று மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
ரிமோட் வேலைவாய்ப்புகள் அமெரிக்க டெக் துறையில் முக்கிய அங்கமாக மாறிய நிலையில், அனைத்து துறையிலும் அதிகரித்து வரும் பணிநீக்கங்கள் மத்தியில் தொழில்நுட்ப துறை மந்தநிலை செல்லும் நிலை உருவாகி வரும் நிலையில் அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் மட்டும் அல்லாமல் பிற முக்கிய வர்த்தக இடங்களிலும் அலுவலக இடத்திற்கான தேவையைக் குறைத்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் இது.
25% காலியிடங்கள்
சியாட்டில் நகரத்தில் மொத்த அலுவலக காலியிடங்கள் இப்போது 25 சதவீதமாக உள்ளது. மேலும் வர்த்தக ரியல் எஸ்டேட் துறைக்கு இது மிகவும் போராட்ட காலமாக இருக்கும் என கணித்துள்ளது கமர்சியல் ரியல் எஸ்டேட் ஏஜென்சியான Colliers. பொதுவாக பெரு நிறுவனங்கள் இதில் கடைசியில் தான் பாதிக்கும், ஆனால் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே பாதித்துள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
வொர்க் ப்ரம் ஹோம் தற்போது அமெரிக்காவில் அதிகமாகியிருக்கும் காரணத்தால் காலியாக இல்லாத அலுவலகங்கள் கூட பெரும்பாலும் ஊழியர்கள் இல்லாமல் 50 சதவீத இருக்கைகள் காலியாக இருப்பதாக சியாட்டில் டைம்ஸ் கூறியுள்ளது.
மக்கள் தொகை
கடந்த கோடை காலத்தில் இருந்து, டவுன்டவுன் சியாட்டில் பகுதியில் இருந்து மக்கள் தொகையில் தொற்றுநோய்க்கு முந்தைய அளவீட்டில் சுமார் 40 சதவீத ஊழியர்கள் மட்டுமே தற்போதுல உள்ளதாக Placer.ai இன் செல்போன் இருப்பிடத் தரவுகளை அடிப்படையாக வைத்து டவுன்டவுன் சியாட்டில் அசோசியேஷனால் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications