Meta: புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி.. இதுல மிக்சி, கிரைண்டர் மட்டும் தான் இல்லை.. விலை எவ்வளவு தெரியுமா.?

Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகளின் வெற்றியைத் தொடர்ந்து, Meta நிறுவனம் தற்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கான புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் கண்ணாடிகள். Oakley என்ற கண்ணாடி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து Al கண்ணாடியை மெட்டா விற்பனைக்கு களமிறக்கவுள்ளது.

ஏஐ கண்ணாடியின் முக்கிய அம்சங்கள் : இந்த Al கண்ணாடியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வகையிலான 12 MP கேமரா (3K Ultra HD) வீடியோ பதிவு, மைக், Bluetooth ஸ்பீக்கர், Meta AI உதவியாளர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் இதில், கைகளின்றி வீடியோ பதிவு, வாய்மொழி கேள்விகளுக்கு நேரடி பதில்கள், கால்கள், மெசேஜ், இசை உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Meta: புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி.. இதுல மிக்சி, கிரைண்டர் மட்டும் தான் இல்லை!  விலை எவ்வளவு தெரியுமா?

அதேபோல், இதை முழுமையாக சார்ஜ் செய்தால், 8 மணி நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. 19 மணி நேரம் காத்திருப்பு மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன்களை வழங்குகின்றன. 20 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். ஒரு சார்ஜிங் கேஸ் மொத்த பயன்பாட்டு நேரத்தை கூடுதலாக 48 மணிநேரம் நீட்டிக்கிறது. இந்த கண்ணாடி IPX4 நீர் எதிர்ப்பு தரநிலையை கொண்டுள்ளது. மேலும் பல்வேறு ஃபிரேம்கள், லென்ஸ் வேரியண்ட்கள் சேர்த்து மருத்துவக் கண்ணாடியாகவும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கண்ணாடி வாட்டர் ப்ரூப் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட பேட்டரி ஆயுள், உயர் தர வீடியோ பதிவு (higher video resolution), Oakley-யின் சிறப்பம்சமான லென்ஸ் தொழில்நுட்பம் ஆகியவை இந்த கண்ணாடியில் இடம்பெற்றுள்ளது. Oakley-யின் சிக்னேச்சர் லென்ஸ் தொழில்நுட்பத்துடன், ரே-பான் மெட்டா வரிசையில் இருந்து Oakley மெட்டா HSTN தனித்து நிற்கிறது. Oakley HSTN மாடல்கள் தற்போது விளையாட்டு மற்றும் செயல்திறன் சார்ந்த பயன்பாட்டை குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

இந்தியாவில் எப்போது விற்பனை..?: தங்க நிற அலங்காரங்கள் மற்றும் PRIZM லென்ஸ்கள் கொண்ட இந்த Oakley Meta HSTN கண்ணாடியை, ஜூலை 11ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். $399 விலையில் இருந்து கூடுதல் மாடல்களும் கிடைக்கும். கோடையின் பிற்பகுதியில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கண்ணாடி விற்பனைக்கு வருகிறது. இந்தியா, மெக்ஸிகோ மற்றும் அரபு எமிரேட்ஸில் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்ணாடி இந்திய ரூபாய் மதிப்பில் ஆரம்ப விலை ரூ.34,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Meta - Oakley கூட்டாண்மையின் தொடர்ச்சியாக, இந்திய சந்தைக்கு AI செயல்பாட்டுள்ள performance smart கண்ணாடிகளை அறிமுகப்படுத்தும் இது புதிய அனுபவத்தையும், இந்திய விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப enthusiasts-க்கு விரிவான தேர்வையும் தரும் என்று நம்பப்படுகிறது. மே மாதத்தில், Meta தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கிளாசிக் வடிவமைப்பைக் கலந்து, பயனர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகில் கவனம் செலுத்தாமல் இணைந்திருக்க உதவுகிறது. இந்த கண்ணாடி ரூ.29,000 முதல் கிடைக்கிறது. இதை Ray-Ban.com என்ற இணையதளம் மூலம் வாங்கலாம்.

இந்த புதிய தயாரிப்பை பிரபலப்படுத்தும் நோக்கில், Meta நிறுவனம் உலகத்தர வீரர்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில் பிரபல உலகக் கோப்பை வெற்றியாளர் Kylian Mbappé மற்றும் NFL நட்சத்திரம் Patrick Mahomes ஆகியோர் இடம்பெறுகின்றனர். மேலும், Oakley Meta HSTN ஸ்மார்ட் கண்ணாடிகள் Fanatics Fest மற்றும் UFC International Fight Week ஆகிய முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+