டிவிட்டருக்கு எப்போதும் மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு எப்போதும் இருக்கிறது, ஆனால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மக்கள் தொட்ரந்து இருந்தாலும் இதில் செலவழிக்கும் நேரம் என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே மெட்டா தனது ஆதிக்கத்தை இழப்பதை உணர்ந்த நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்பதை தீவிரமாக யோசித்து வந்த போது தான் எலான் மஸ்க் கைபற்றிய பின்பு டிவிட்டரில் மக்கள் பல மணிநேரம் பயன்படுத்துவதையும், டிவிட்டருக்கு போட்டியாக வந்த Mastodon-க்கு கிடைத்த வரவேற்பை கண்டு வியப்பு அடைந்தது.
இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உடன் தற்போது டிவிட்டரை போன்ற ஒரு தளத்தை decentralised social networking கட்டமைப்பில் Pump.io-வின் ActivityPump protocol கீழ் உருவாக்க உள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க்
இந்த மாபெரும் திட்டத்தை மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா P92 என்ற பட்டப்பெயருடன் உருவாக்கி வருகிறது. இது வெறும் ஐடியா அளவில் உள்ளதா அல்லது டெவலப்மென்ட் செய்யப்பட்டு வருகிறதா என தெரியமால் இருந்த நிலையில் தற்போது மெட்டா விளக்கம் கொடுத்துள்ளது.
மெட்டா
மெட்டா செய்தி தொடர்பாளர் கூறுகையில் decentralised social networking தளத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம், மேலும் இன்னும் கிரியேட்டர்கள் மற்றும் பிரபலங்களுக்கான இடம் சமுகவலைத்தளத்தில் காலியாக உள்ளது என நாங்க நம்புகிறோம்.
மெட்டா Project P92
இதேபோல் மெட்டா Project P92 என்ற திட்டத்தில் டிவிட்டரில் இருப்பது போலவே டெக்ஸ்ட் போஸ்ட் செய்யவும், இமேஜ், வீடியோ, அப்போடு செய்து அதை ஷேர் மற்றும் ரீஷேர் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. கிட்டதட்ட டிவிட்டரில் இருக்கும் அனைத்து சேவைகளும் இதில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய சிறப்பாக Project P92 decentralised social networking கட்டமைப்பில் இருக்கும்.
சிறப்புகள்
ActivityPump protocol என்பது ஓப்பன் சோர்ஸ் என்பதால் வாடிக்கையாளர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பமாற்றிக்கொள்ள முடியும் குறிப்பாக லாக்இன் செய்யும் போதே உங்கள் தரவுகளைச் சேமிக்கும் சர்வர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்புக் கிடைக்கிறது, ஒவ்வொரு யூசரும் தனக்கான விதிகளைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியும் moderation விதிகள் உட்பட. இதன் மூலம் நீங்கள் விரும்பாத கண்டென்ட் உங்கள் FEEDல் வராது.
போட்டி
இப்பிரிவில் தற்போது Mastodon, Post.news, T2 போன்ற பல தளங்கள் உள்ளது இவை அனைத்தும் சிறியது என்பதால் மெட்டா இப்பிரிவில் வருவது மூலம் பெரும் மாற்றத்தையும் ஆதிக்கத்தையும் செலுத்தும். ஆனால் மெட்டா பொருத்த வரையில் வீடியோ-வுக்கு மாறிவரும் வேளையில் டெக்ஸ்ட் பிரிவில் டிவிட்டர் உடன் போட்டிப்போட முயற்சி செய்கிறது.


Click it and Unblock the Notifications