உலகம் முழுவதும் பல்வேறு நிதி நிறுவனங்களும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பற்பல டெக் ஜாம்பவான்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பணியமர்த்தலை குறைத்துள்ளன. சம்பள அதிகரிப்பு, ஊக்கத்தொகை, பதவி உயர்வினை நிறுத்தி வைத்துள்ளன.
தற்போது மெட்டா பிளார்ட்பார்ம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், தனது செலவு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மறுசீரமைப்பு நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிகிறது.
மறுசீரமைப்பு நடவடிக்கை
இது சமூக வலைதள நிறுவனம் வளர்ச்சியில் மந்த நிலையை எட்டி வருவதையே சுட்டி காட்டுகின்றது. குறிப்பாக மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மெட்டா நிறுவனம் முதல் முறையாக இத்தகைய நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்காலிகமாக பணியமர்த்தல் நிறுத்தம்
பேஸ்புக் நிறுவனம் 2004ல் தொடங்கிய பிறகு பட்ஜெட்டில் குறைப்பு நடவடிக்கையினை எடுத்துள்ளது இதுவே முதல் முறையாகும். பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் செலவு குறைப்பு நடவடிக்கையினை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் மெட்டா நிறுவனத்தின் மொத்த பணிக்குழுவின் அளவு குறையலாம்.
எல்லா துறைகளிலும் ஆள் குறைப்பு
மேலும் ஊழியர்களுடனான வாராந்திர கேள்வி & பதில் அமர்வினையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையானது கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வளர்ச்சி காணும் துறையாகவே இருந்தாலும் ஆள்குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பங்கு விலை சரிவு
எனினும் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யட உள்ளார்கள் என்பது குறித்தான விவரம் வெளியாகவில்லை. மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு மத்தியில் இந்த நிறுவன பங்கின் விலையானது 3.7% சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் இப்பங்கின் விலையானது 60% சரிவினைக் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications