டெக் துறையில் செய்யப்பட்டு வரும் பணி நீக்கம் என்பது சமீபத்திய மாதங்களாகவே இருந்து வருகின்றது. இதனால் பல லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனலாம். குறிப்பாக டெக் ஜாம்பாவான்கள் கூட பெரும் அளவில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
தற்போது சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின், தாய் நிறுவனமான மெட்டா கூட இந்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் பதற்றம்
இந்த பணி நீக்க நடவடிக்கையானது கடந்த ஆண்டு இறுதியில் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு பின்னர் தற்போது வந்துள்ளது. முன்னதாக நிறுவனம் பல்வேறு துறை சார்ந்த அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 13 சதவீதம் அல்லது 11,000 பேரை பணி நீக்கம் செய்தது.
ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்பு
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியினை இழக்கலாம் என தெரிகிறது. இந்த பணி நீக்கத்தில் எந்த ஊழியர்கள் எல்லாம் இருக்க போகிறார்கள் என்ற பட்டியலை தலைமை நிர்வாகம், துணை தலைவர்களிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2வது கட்ட பணி நீக்கம்
இந்த பணி நீக்க நடவடிக்கையானது கடந்த ஆண்டு இறுதியில் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு பின்னர் தற்போது வந்துள்ளது. முன்னதாக நிறுவனம் பல்வேறு துறை சார்ந்த அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 13 சதவீதம் அல்லது 11,000 பேரை பணி நீக்கம் செய்ததது.
மெட்டா ஊழியர்கள் மறுப்பு
எனினும் தற்போது இந்த புதிய பணி நீக்கம் குறித்தான கருத்தினை மெட்டா ஊழியர்கள் மத்தியில் மறுக்கப்பட்டுள்ளது. இது மெட்டா நிறுவனத்தின் வருவாய் விகிதமானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், மெட்டா நிறுவனம் பெரும் மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் இத்தகைய செலவு குறைப்பு நடவடிக்கையானது வந்துள்ளது.
அதிகாரப்புர்வ தகவல் இல்லை
மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் அதன் செயல்திறனை மதிப்பீடு செய்து, நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்தது. இதற்கிடையில் தற்போது இரண்டாவது சுற்று பணி நீக்க நடவடிக்கை என்பது பெரும் கவலையை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும், இது உண்மையா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. ஏனெனில் மெட்டா நிறுவனம் இது குறித்த எந்த அதிகாரப்புர்வ தகவலையும் வெளியிடவில்லை .
ஊழியர்கள் அதிர்ச்சி
தற்போது உலகம் முழுக்க பல்வேறு சவாலான நெருக்கடியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications