உலகம் முழுவதும் பல டெக் நிறுவனங்களும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் மெட்டா பிளார்ட்பார்ம் இன்க் நிறுவனம் நியூயார்க் நகரத்தில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், விரிவாக்கத்தினை குறைத்து, அலுவலகங்களில் ஒன்றை மூடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குத்தகை பத்திரம் ரத்தா?
அமெரிக்காவின் முக்கிய நகரத்தில் உள்ள அலுவலத்தின் குத்தகை பத்திரத்தினை விலக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது மெட்டா நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், இத்தகைய் முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
செலவு குறைப்பு நடவடிக்கை
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், மறுசீரமைத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு உள்ளிட்ட பல மாற்றங்கள் பற்றி கூறியிருந்த நிலையில், இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்க் கூறியது போல ஏற்கனவே மெட்டா நிறுவனம் பணியமர்த்தலை முடக்கி, செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்து
இது குறித்து மார்க் வாராந்திர கேள்வி பதில் அமர்வில், தனது ஊழியர்களிடம் கூறுகையில், பொருளாதாரம் இப்போது நிலையான இருக்கலாம் என நாங்கள் நினைத்தோம். ஆனால் தற்போதைய நிலவரம் அப்படி இல்லை. பெரும்பாலான அணிகளின் வரவு செலவு திட்டத்தினை நாங்கள் மிகைப்படுத்தி மதிப்பிடும். பணியாளர்களில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பதை தனிப்பட்ட குழுக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முதல் முறையாக பட்ஜெட் குறைப்பு
ஏற்கனவே பணியமர்த்தலை குறைந்துள்ள மெட்டா நிறுவனம், நிறுவனம் முன்பை விட 2023ல் சிறியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் இன்னும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடரலாம் என்றும் கூறியுள்ளது. பேஸ்புக்கின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது 2004ல் பேஸ்புக் தொடங்கப்பட்டதில் இருந்து, முதன் முறையாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக உள்ளது. சொல்லப்போனால் இது முதல் செலவு குறைப்பு நடவடிக்கையாக உள்ளது.
மார்ஜினில் பாதிப்பு
இந்த செலவு குறைப்பு நடவடிக்கையினை மெட்டா நிறுவனம் இதனை அனைத்து துறைகளிலும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் செலவு குறைப்பின் மற்றொரு நடவடிக்கையாக பணியமர்த்தலையும் முடக்கியுள்ளது. செலவுகள் அதிகரித்து வரும் இந்த சூழலில் விளம்பர வருவாயும் குறைந்துள்ளது. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இதன் மார்ஜின் விகிதமும் பாதிக்கப்பட்டுள்ளது. மெட்டாவுக்கு போட்டியாக டிக்டாக் இன்னும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வரும் நிலையில் இது மேற்கோண்டு, மெட்டாவுக்கு சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications