டெக் துறையில் 2023 முதல் துவங்கிய பணிநீக்கம், 2025லும் தொடர்கிறது. இந்த ஆண்டு அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், சேல்ஸ்போர்ஸ் என பல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் இந்த பட்டியலில் மெட்டாவும் இணைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்-க்கு சேவைகளை நிர்வாகம் செய்யும் நிறுவனமான மெட்டா, இந்நிறுவனம் உலகளாவிய தனது ஊழியர்களை படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி ஜனெல் கேல் வெளியிட்டுள்ளார்.

இந்த பணிநீக்கம் குறித்து மெட்டா நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மெமோ வாயிலாக முன்னறிவிப்பு செய்துள்ளது. இந்த பணிநீக்கத்திற்கு பின்பு மெஷின் லேர்னிங் பிரிவில் அதிகப்டியான ஊழியர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான நாடுகளில், உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 5 மணி முதல் பணிநீக்க அறிவிப்புகள் மெட்டா ஊழியர்கலுக்கு வழங்கப்பட உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும்.
இருப்பினும், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அந்தந்த நாடுகளின் தொழிலாளர் சட்டங்களின் காரணமாகும்.
ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு பிப்ரவரி 11 முதல் 18 வரை பணிநீக்க அறிவிப்புகள் ஊழியரின் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனம் எந்தவித அதிகாரப்பூர்வமான கருத்தையும் வெளியிடவில்லை.
கடந்த மாதம், நிறுவனத்தின் பணியாளர்களில் சுமார் 5% பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மெட்டா அறிவித்திருந்தது. குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், சில துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மெட்டா நிர்வாகம் முன்பு செய்யப்பட்ட பணிநீக்கத்தை போல் அல்லாமல், இந்த பணிநீக்க சுற்றில் வெளியேற்றப்படும் பணியிடங்களில் மீண்டும் நிரப்ப முயற்சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கம் முழுமையாக "செயல்திறன் அடிப்படையிலான பணிநீக்கமாக மட்டுமே இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications