பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தைச் சுற்றிப் பல விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.
2021ல் பேஸ்புக் தரவுகள் வெளியானது முதல் சமீபத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் மிகவும் நம்பி பெரும் தொகை முதலீடு செய்து உருவாக்கப்பட்ட மெட்டாவெர்ஸ் கூட்டம் வரையில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா எடுத்த முடிவால் இந்த நிறுவனத்தை நம்பியிருக்க ஐடி துறை அல்லாத ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
மெட்டா நிறுவனம்
மெட்டா நிறுவனம் செலவுகளைக் குறைப்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் அதிகப்படியான வேலை பளுவை கொடுத்து ஊழியர்களின் திறனை செக் செய்து வரும் இதே நிலையில், ஊழியர்களுக்கு ஏதுவாக வொர்க் ப்ரம் ஹோம், ரிமோட் வொர்க் வசதிகளை அளித்து வருகிறது.
அலுவலக உதவியாளர்கள்
இதனால் மெட்டா நிறுவனத்தில் உதவியாளர்களின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதம் ஊழியர்களின் வருகை குறைந்த காரணத்தால் 100க்கும் அதிகமான அலுவலக உதவியாளர்களை (janitors) மெட்டா கலிபோர்னியா அலுவலகப் பணியில் இருந்து நீக்கியது.
பஸ் ஷெட்டில் டிரைவர்கள்
இதைத் தொடர்ந்து தற்போது மெட்டா ஊழியர்களை அழைத்து வரும் பஸ் ஷெட்டில் டிரைவர்களைப் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மெட்டா தனது பஸ் ஷெட்டில் பணிகளை Hallcon Corporation மற்றும் WeDriveU என்ற இரு நிறுவனங்களிடம் இருந்து கான்டிராக்ட் முறையில் பெற்று வருகிறது.
160 பேர் பணிநீக்கம்
தற்போது மெட்டா நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதைக் குறைத்துள்ள காரணத்தால் பஸ் ஷெட்டில் சேவையைக் குறைத்துள்ளது. இதைச் சமாளிக்க முடியாத Hallcon Corporation மற்றும் WeDriveU நிறுவனம் 63 மற்றும் 97 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது மெட்டா பஸ் ஷெட்டில் டிரைவர்களின் மொத்த எண்ணிக்கையில் 3ல் ஒரு பங்கு ஆகும்.
மெட்டா விளக்கம்
மெட்டா செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால், இப்பிரிவு ஊழியர்களுக்கான சேவையை மறுசீரமைப்புச் செய்து விட்டு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான சேவைகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications