உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான மெட்டா கீழ் இயங்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்து சேவை பிரிவுகளிலும் போலி கணக்குகளையும், BOT மூலம் இயக்கப்படும் கணக்குகளையும் குறிவைத்து முடி வருகிறது.
இந்த நிலையில் மெட்டா நிர்வாகம் 2025-இன் முதல் பாதியில் மட்டும் ஃபேஸ்புக்கில் சுமார் 1 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் "ஸ்பாம் கன்டென்ட்" பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக 1 கோடி கணக்குகளை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. மூஞ்சில மருவு வைச்சா அடையாளம் தெரியாதா என்ற வகையில் உண்மையான கணக்குகளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் கணக்குகளை கட்டம் கட்டி தூக்கி வருகிறது பேஸ்புக்.

இந்த நடவடிக்கை மூலம் ஃபேஸ்புக்கில் காட்டப்பட்டும் கன்டென்ட் மிகவும் உண்மையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என பேஸ்புக் தீவிரமாக நம்புகிறது. குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் AI மூலம் உருவாக்கப்பட்ட அர்த்தமற்ற மற்றும் போலியான கன்டென்ட் சமூக ஊடகங்களை நிரப்பி வரும் நிலையில், இத்தகைய முடிவு அவசியமானதாக உள்ளது.
1 கோடி கணக்குகளை மூடக்கியது மட்டும் அல்லாமல் 5 லட்சம் கணக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மெட்டா தனது சமூக ஊடக சேவையில் புதிய கொள்கைகளை வெளியிட்டு உள்ளது. இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயமாக இருப்பது என்னவென்றால் இனி வரும் காலத்தில் பேஸ்புக் அல்காரிதம் தனித்துவமான படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்கும் ரியல் கிரியேட்டர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி மற்றும் அர்த்தமற்ற கன்டென்ட்-களை உருவாக்குவோருக்கு இனி வரும் காலத்தில் முக்கியதுவம் அளிக்கப்படாது, இதோடு கணக்குகள் அடுத்தடுத்து வேகமாக நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் மக்களுக்கு பயனுள்ள வகையில் அதேபோல் எவ்விதமான பாதிப்பும் இல்லாத AI மூலம் உருவாக்கப்படும் கன்டென்ட்-களுக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கும்.
இந்த கிளீன்அப் முயற்சி மெட்டா நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து ஊடக நிறுவனங்களிலும் வேகமாக நடந்து வருகிறது. ஒருப்பக்கம் AI பயன்பாடு மக்கள் மத்தியில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமானதாக உள்ளது.
மேலும் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ-வான மார்க் ஜுக்கர்பெர்க் அடுத்த ஆண்டு, முதல் AI சூப்பர் கிளஸ்டரை தொடங்கவும், நிறுவனத்தில் சூப்பர் கம்பியூட்டர் திறன்களை உருவாக்கவும் 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மெட்டா தற்போது ஏஐ துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக டாப் ஏஐ நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை பெரும் சம்பளத்துடன் பணியில் அமர்த்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த மாதம் யூடியூப் கூட தனது கொள்கையை மாற்றியுள்ளது. மதிப்பு குறைந்த அல்லது அர்த்தமற்ற வீடியோக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் ஆன்லைனில் குழப்பத்தை ஏற்படுத்தியதால், யூடியூப் தரப்பில் தனிப்பட்ட முறையில் விளக்கம் அளித்ததுள்ளது.
யூடியூப் வெளியிட்டுள்ள விளக்கம் மூலம் AI உதவியுடன் உருவாக்கப்பட்ட கன்டென்ட் அனைத்தும் இன்னும் அனுமதிக்கப்படும், ஆனால் மதிப்புற்ற, ஏஐ உதவியுடன் திரும்ப திரும்ப உருவாக்கப்பட்டும், அதிகப்படியாக ஓரே மாதிரியான கன்டென்ட் உருவாக்கப்படும் வீடியோவுக்கு எவ்விதமான பணம் அளிக்கப்படாது என அறிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications