AI-க்கு மனித உருவம் கொடுக்கும் மார்க்.. சீன நிறுவனத்துடன் கை கோர்த்து 3 மாதங்களில் ரோபோ உருவாக்கம்..!!

அமெரிக்க டெக் நிறுவனங்கள் மத்தியில் ஏஐ போட்டி மிக தீவிரமானதாக மாறியுள்ளது. கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட், எக்ஸ், ஓபன் ஏஐ என பல நிறுவனங்களும் போட்டி போட்டு தங்களின் ஏஐ படைப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா அதிரடியாக இந்த துறையில் களமிறங்கியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் செயற்கை நுண்ணறிவுக்கு மனித உருவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார். அதாவது, மனித உருவத்திலான புதிய Humanoid Robot-க்களை உருவாக்கும் முயற்சியில் மெட்டா இறங்கியுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனம், சீனாவின் புகழ்பெற்ற ரோபாட்டிக்ஸ் நிறுவனமான Fourier Intelligence உடன் இணைந்து இந்த ரோபோவின் முதல் வடிவத்தை உருவாக்கியுள்ளது. இந்த மாதிரி ரோபோ மூன்றே மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

AI-க்கு மனித உருவம் கொடுக்கும் மார்க்.. சீன நிறுவனத்துடன் கை கோர்த்து 3 மாதங்களில் ரோபோ உருவாக்கம்..!!

மேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, 5 அடி உயரமும், 48 கிலோ எடையும் கொண்டுள்ளது. 5 விரல்களுடன் கூடிய கைகள், ஸ்பீக்கர்கள் மற்றும் மனித முகபாவனைகளை வெளிப்படுத்தும் வகையில் கண்களும் வாயும் இயங்குவது போன்ற திரை முகப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது 5 மீட்டர் தூரத்திலிருந்து மனிதர்களின் குரலை கேட்கவும், 3 மீட்டர் தூரத்திலிருந்து சைகைகளை புரிந்து கொள்ளவும், திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read

மெட்டாவின் மியூஸ் (Muse) எனப்படும் AI ஏஜெண்டை இந்த ரோபோவுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு மென்பொருளாக மட்டும் இல்லாமல், ஏஐ நிஜ உலகிற்கு வந்து வீட்டு வேலைகள் போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளை செய்யும் திறன் கொண்டதாக மாற வேண்டும் என்பதே மார்க் ஜக்கர்பெர்க்கின் திட்டம்.

முதல் மாடல் ரோபோ வடிவத்தின் வெற்றியை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மெட்டா மற்றும் ஃபோரியர் நிறுவனங்கள் இணைந்து மேக்ஸ் 2 ரோபோ தயாரிப்பு பணிகளில் இறங்கிவிட்டன. இதில் பொருட்கள் மற்றும் பாட்டில்களை மிகவும் எளிதாக பிடிக்கும் திறன் கொண்டதாக கைகள் மாற்றப்பட உள்ளன. மேலும் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்றவற்றை திரையிட்டு பார்க்க ஒரு ப்ரோஜெக்டர் சேர்க்கப்படவுள்ளது. படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு ஏதுவாக கூடுதல் சென்சார்கள் பொருத்தப்படுகின்றன.

Recommended For You

இந்த ரோபோக்கள் உடனடியாக விற்பனைக்கு வரப்போவதில்லை. மெட்டா நிறுவனம் தற்காலிகமாக இவற்றை ஆராய்ச்சி மற்றும் சோதனை பணிகளுக்காக மட்டுமே உருவாக்கி வருகிறது. பின்னர் படிப்படியாக இது விற்பனைக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படும். டெஸ்லா, கூகுள், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் மெட்டாவும் மனித வடிவ ரோபோ துறையில் தனது காலடியை வலுவாக பதிக்க தயாராகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+