உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமாக இருக்கும் பேஸ்புக், முதல் முறையாகத் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இழப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் முதல் முறை இழப்பு என்பதாலும், பேஸ்புக்-ன் ஆதிக்கம் குறைக்கப் போட்டி நிறுவனங்கள் வந்துள்ள காரணத்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
பேஸ்புக்-ன் 2022 முதல் காலாண்டு முடிவுகளின் கணிப்பு வெளியான பின்பு இதன் தாய் நிறுவனமான மெட்டா பங்குகள் யாரும் எதிர்பார்காத வகையில் 20 சதவீதம் வரையில் சரிந்து அமெரிக்க டெக் முதலீட்டு சந்தையைப் புரட்டிப்போட்டு உள்ளது.
மெட்டா பிளாட்பார்ம்ஸ்
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் சந்தை கணிப்புகளைக் காட்டிலும் மோசமான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட காரணத்தால் மெட்டா பங்குகள் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இது பேஸ்புக் நிறுவன முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது.
பேஸ்புக்
நடப்புக் காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் தினசரி இத்தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.930 பில்லியனில் இருந்து 1.929 பில்லியனாக நடப்புக் காலாண்டில் குறைந்துள்ளது. முதல் முறையாக வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவது குறிப்பிடத்தக்கது.
டிக்டாக், யூடியூப்
வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிவுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றிய பாதுகாப்பு அம்சங்களும், டிக்டாக், யூடியூப் போன்ற பல நிறுவனங்களின் ஆதிக்கமும் போட்டியும் தான் காரணம் எனக் கூறப்பட்டு உள்ளது. ஆப்பிள் செய்துள்ள மாற்றத்தால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பரங்களை டார்கெட் செய்து அளிக்க முடியாமல் உள்ளது.
வருவாயும் குறையும்
மேலும் டிக்டாக் மற்றும் யூடியூப் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ள காரணத்தால் இனி வரும் காலகட்டத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிவு மட்டும் அல்லாமல் வருவாயும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்
மேலும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் இருக்கும் ஷாட் வீடியோ மற்றும் ரீல்ஸ் சேவைகளை அதிகம் பயன்படுத்தும் காரணத்தால் வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் இருக்கும் கால அளவீடுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் வருமானமும் பெற உள்ளது.
வருவாய் கணிப்பு
இதன் மூலம் மார்ச் மாதத்துடன் முடியும் காலாண்டில் மெட்டா 30.1 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்நிறுவன கணிப்பின் படி 27 - 29 பில்லியன் டாலர் மட்டுமே வருமானத்தைப் பெறும் எனத் தெரிகிறது. மேலும் ஆப்பிள் செய்துள்ள விதி மாற்றத்தின் மூலம் மட்டும் 2022ல் 10 பில்லியன் டாலர் வருவாயை இழக்கும் நிலை உருவாகும் எனக் கணித்துள்ளது.
200 பில்லியன் டாலர்
இந்தக் கணிப்பு வெளியான பின்பு பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா பங்குகள் சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ள நிலையில், மெட்டா நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications