28 வயதில் Panic Attack.. உயிர் முக்கியமென ரூ.3 கோடி சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்த இளைஞன்..!

இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, உணவு முறை மிகவும் மோசமாக இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில் உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் அதிக சம்பளம் வாங்கும் காப்பரேட் பணியில் இருப்பவர்கள் வரையில் அனைவரின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது.

சமீபத்தில் ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனமான பெப்பர்ஃப்ரை-ன் இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி லே பகுதிக்கு பைக் ரைடு சென்றதன் மூலம் மாரடைப்பால் மறைந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை.

28 வயதில் Panic Attack.. உயிர் முக்கியமென ரூ.3 கோடி சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்த இளைஞன்..!

இப்படியிருக்கையில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என ஒட்டுமொத்த சமுக வலைத்தள துறையை கட்டி ஆளும் மெட்டா நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் 28 வயதான எரிக் யூ-க்கு (Eric Yu) திடீரென இதய துடிப்பு அதிகமாகி, காதுகளை அடைத்து Panic Attack ஏற்பட்ட கதை இணையத்தில் வரைலானது.

நேற்று World Mental Health Day கொண்டாடப்பட்ட நிலையில் Eric Yu-வின் பழைய பதிவுகள் இணையத்தில் டிரெண்டாக துவங்கியது. இதில் Eric Yu மெட்டா நிறுவனத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகள், எதனால் பேனிக் அட்டாக் வந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.

Eric Yu வார்த்தில் 7 நாளும் பணியாற்றியும், கோடிங் டெவலெப்மென்ட் செய்தும் வந்துள்ளார். Eric Yu-வுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஆனால் பேஸ்புக் மீதான ஆர்வத்தாலும், சமுக வலைத்தளத்தில் பணியாற்றுவதால் புதிய தலைமுறை தொழில்நுட்பத்தில் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து மெட்டாவில் சேர்ந்தார்.

சுமார் 3 கோடி ரூபாய் சம்பளத்துடன் மெட்டா நிறுவனத்தின் பணியில் சேர்ந்த Eric Yu கடுமையான ப்ரெஷரை எதிர்கொண்டு உள்ளார். பொதுவாக பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு பெரும் இலக்கு நிர்ணயம் செய்யப்படும். கோட் ரிவ்யூவ் கடுமையான சூழ்நிலையில் பரிசோதனை செய்யப்படும் என Eric Yu தெரிவித்தார்.

Eric Yu எழுதிய கம்ப்யூட்டர் கோடிங்-ஐ சரி செய்ய பல முறை கடுமையான பீட்பேக் வந்தது மூலம் பல முறை தான் டென்ஷனாகியதாக தெரிவித்தார், இதன் மூலம் மோசமாக மனநிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் மெட்டா தனது இன்டர்னல் ரேட்டிங்-ஐ வெளிப்படையாக வைத்திருக்கிறது, இதனால் ஒருவரின் ரேட்டிங் அனைத்து சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கும் தெரியும்.

Eric Yu ரேட்டிங் குறையும் போதெல்லாம் மோசமான நிலைக்கு மனதளவில் தள்ளப்பட்டு உள்ளார், இதனால் ரேட்டிங்-ஐ மேம்படுத்த கடுமையாக பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு சனி, ஞாயிறு சேர்த்து வாரம் முழுவதும் பணியாற்றும் வழக்கத்தை கொண்டு இருந்தார். இதனாலேயே அவருடைய மன அழுத்தம் படிப்படியாக அதிகரித்து பேனிக் அட்டாக் வரும் அளவுக்கு தள்ளியுள்ளது.

Eric Yu 2019 முதல் பல முறை இத்தகைய பேனிக் அட்டாக்-ஐ எதிர்கொண்டு உள்ளார். இந்த நிலையை அவருடயை சக பணியாளரும், காதலியுமானவர் கவனித்தார். உயிர் முக்கியம் என்று முடிவு செய்து 2022ல் மெட்டா வேலையை இருவரும் ராஜினாமா செய்து, டெக் பணியாளராக இருந்து ரியல் எஸ்டேட் அதிபராக மாறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+