Facebook-ன் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் சிஇஓ மார்க் மார்க் ஜூக்கர்பெர்க் செவ்வாயன்று தனது பணியாளர்களில் சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் புதிதாக 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது மெட்டா. மெட்டா நிறுவனம் 2022 ஆம் ஆண்டு பாதியில் இருந்து சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்த நிலையில் மாஸ் லேப்ஆப்-ஐ நவம்பர் மாதம் அறிவித்தது.
இதை தொடர்ந்து 2வது முறையாக தற்போது அறிவிக்க உள்ளது.
டெக் சேவை நிறுவனங்கள்
உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் இதில் இருந்து மீள முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. இது மட்டும் அல்லமால் புதிய முதலீடு, புதிய கடன்களை பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் காரணத்தால் தற்போது 2வது சுற்று பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க்
இந்த நிலையில் மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ஊழியர்களுக்கு அனுப்பிய மெசேஜ்-ல் தற்போது இருக்கும் மொத்த ஊழியர்களில் 10000 ஊழியர்களையும், பணியில் சேர்க்காமல் காலியாக இருக்கும் 5000 வேலைவாய்ப்புகளை முழுமையாக நீக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.
2வது ரவுண்ட் பணிநீக்கம்
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான பேஸ்புக் 2022 நவம்பர் மாதம் சுமார் 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து பெரும் அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது 2வது ரவுண்ட் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
மெசேஜ்
மேலும் மார்க் ஜூக்கர்பெர்க் ஊழியர்களுக்கு அனுப்பிய மெசேஜ்-ல் அடுத்த 2 மாதத்தில் நிறுவனத்தில் இருக்கும் தலைவர்கள் ஊழியர்கள் குறைப்பை அறிவிப்பார்கள் இதன் மூலம் மெட்டா flattening ஸ்டக்சரில் இயங்கும். இதோடு முக்கியமில்லாத திட்டங்களை மூடுவது குறித்து அறிவிக்கப்படும், புதிய ஊழியர்களை தேர்வு செய்யும் முடிவுகள் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
15000 இடங்கள்
இதன் மூலம் மொத்த ஊழியர்களில் 10000 பேரை பணிநீக்கம் செய்யவும், பணியில் சேர்க்காமல் காலியாக இருக்கும் 5000 வேலைவாய்ப்புகளை முழுமையாக நீக்கவும் உள்ளது என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார்.
2023 இலக்கு
மார்க் ஜூக்கர்பெர்க் 2023 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இந்த ஆண்டு efficiency-ஐ மட்டுமே மையமாக வைத்து இயங்கப்படும், இது மட்டும் அல்லாமல் எந்த நிலையிலும் தளராமல் இயங்கக்கூடிய கடுமான கட்டமைப்பை கொண்டு இருக்க வேண்டும் என முடிவு செய்து ஊழியர்களிடம் தெரிவித்தார்.
பணிநீக்கம் உறுதி
இந்த நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் பணிநீக்கம் உறுதி செய்துள்ளார். ஆனால் எப்போது பணிநீக்கம் செய்யப்படுவார்கள், ஊழியர்களுக்கு இதுக்குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்பதை பற்றி வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications