டெக் துறையில் அதிகம் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பட்டியலில் மெட்டா முக்கியமானதாக உள்ளது, மார்க் ஜூக்கர்பெர்க் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு அதிகப்படியான நெருக்கடிகளை கொடுத்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணிநீக்கம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் மெட்டா சமீபத்தில் வெளியிட்ட மெட்டா குவெஸ்ட் கருவியை தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரமும் பெரிய அளவிலான பாதிப்பும் உருவாகியுள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது மெட்டாவெர்ஸ் தளத்தில் இயங்கும் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் இருக்கும் கஸ்டம் சிலிக்கான் தயாரிக்கும் அணியில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் மெட்டா நிர்வாகத்தின் இன்டர்நெல் டிஸ்கஷன் நடந்துள்ளது, இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பணிநீக்கம் குறித்து ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு புதன்கிழமை காலையில் பணிநீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் FAST எனப்படும் Facebook Agile Silicon Team-ல் இருந்து பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இந்த பிரிவில் மட்டுமே சுமார் 600 ஊழியர்கள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அணி மெட்டா தயாரிக்கும் பல்வேறு கருவிகளுக்கு தேவையான சிப்-களை உருவாக்கும் பணிகளை செய்து வருதிறது.

மெட்டா தற்போது பல்வேறு AR VR கருவிகளை தயாரித்து வருகிறது, இது முதல் முறையாக சந்தையில் வரும் கருவிகளாக இருக்கும் காரணத்தால் குறிப்பிட்ட கருவிகள் குறிப்பிட்ட பணிகளை செய்ய சிப் லெவலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக தான் Facebook Agile Silicon Team-ல் சுமார் 600 ஊழியர்களை மார்க் ஜூக்கர்பெர்க் சேர்த்தார்.
மெட்டா-வின் Facebook Agile Silicon Team உருவாக்கும் சிப்களை, குவால்கம் நிறுவனத்திற்கு அவுட்சோர்சிங் செய்து தயாரித்து வருகிறது. மெட்டா ஊழியர்கள் மத்தியில் இந்த பிரிவில் பணிநீக்கம் நடக்கும் என நீண்ட காலமாக கணித்த நிலையில் தற்போது இதற்கான அறிவிப்புகள் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications