மெட்டல் & ஆட்டோ துறைக்கும் இது மோசமான காலம் தான்.. எப்படி தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், இந்தியாவின் ஒட்டுமொத்த துறைகளும் முடங்கி போயுள்ளன.

 

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மற்றும் மெட்டல் துறைகளும் பெருத்த அடி வாங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக ஒரு அறிக்கையில் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கமான சியாம், ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்து இருந்தது.

சியாமின் அறிக்கை

சியாமின் அறிக்கை

கொரோனாவினால் பெருத்த அடி வாங்கி வரும் துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் உற்பத்தி துறையில் 49% பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான அளவு பங்கு வகித்து வருகிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சியாம் முன்னதாக ஒர் அறிக்கையில் கூறியிருந்தது.

பெருத்த அடி தான்

பெருத்த அடி தான்

ஏற்கனவே பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ள நிறுவனங்கள், போதுமான மூலக்கூறுகள் இல்லாமல் தவித்து வருகின்றன. இது தான் இப்படி எனில் பிஎஸ் 4ன் படி உற்பத்தி செய்யப்பட்ட பழைய வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் வாகனத் துறை நிறுவனங்கள் பெருத்த அடி வாங்கி வருகின்றன. இதனால் இத்துறை சார்ந்த பங்குகளும் பாதாளம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ள நிறுவனங்கள், போதுமான மூலக்கூறுகள் இல்லாமல் தவித்து வருகின்றன. இது தான் இப்படி எனில் பிஎஸ் 4ன் படி உற்பத்தி செய்யப்பட்ட பழைய வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் வாகனத் துறை நிறுவனங்கள் பெருத்த அடி வாங்கி வருகின்றன. இதனால் இத்துறை சார்ந்த பங்குகளும் பாதாளம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன.

பெரும் சவால் தான்
 

பெரும் சவால் தான்

இதற்கிடையில் வாகனத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் உலோகத்துறையும், இதனால் பெருத்த அடி வாங்கி வருகின்றது. இதனால் உலோகத்துறை பங்கும் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் கொரோனாவின் தாக்கம் மத்தியிலும் முதலீட்டாளர்கள் இப்படியும் ஒரு சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வீழ்ச்சி

தொடர்ந்து வீழ்ச்சி

அதிலும் முடிவடைந்த நிதியாண்டில் இத்துறை சார்ந்த பங்குகள் பல அடிவாங்கியுள்ளன. ஏற்கனவே பல காரணங்களால் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவினால் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக BSE மெட்டல் இண்டெக்ஸ் 46.69% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே BSE ஆட்டோ இண்டெக்ஸ் 42.92% வீழ்ச்சி கண்டுள்ளது.

குறைந்து வரும் தேவை

குறைந்து வரும் தேவை

கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா பரவல் இன்று உலகம் முழுக்க ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த உலகிலும் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால், உலோக தேவையானது வீழ்ச்சி கண்டு வருகிறது. இது தொடர்ச்சியான விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது. இதனால் அத்துறை சார்ந்த பங்குகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.

விற்பனையும் சரிவு

விற்பனையும் சரிவு

ஏற்கனவே கடந்த நிதியாண்டின் பல காலாண்டுகளில் நிலவி வந்த பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன விற்பனையானது வெகுவாக குறைந்த நிலையில், தற்போது கொரோனாவினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விற்பனையானது முற்றிலும் முடங்கியுள்ளது.

மெட்டல் குறியீடு

மெட்டல் குறியீடு

குறிப்பாக இந்திய சந்தையில் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் 23.8% வீழ்ச்சியுடனும், இதே நிஃப்டி 26.03% வீழ்ச்சியுடனும் 2020ம் நிதியாண்டில் வீழ்ச்சி கண்டுள்ளன. இது கடந்த 2009ம் நிதியாண்டிற்கு பிறகு ஏற்பட்ட மோசமான வீழ்ச்சியாகும். கடந்த இரண்டு நிதியாண்டுகளாகவே மெட்டல் குறியீடு தொடர்ச்சியாக வீழ்ச்சியைத் தான் சந்தித்து வருகின்றன. இது 2020ம் நிதியாண்டில் மிக மோசமான 46.69% வீழ்ச்சி கண்டுள்ளது,. இதே 2019ம் நிதியாண்டில் 14.76% வீழ்ச்சி கண்டுள்ளது.

எந்தெந்த பங்குகள் வீழ்ச்சி

எந்தெந்த பங்குகள் வீழ்ச்சி

ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 2018 மற்றும் 2017ம் நிதியாண்டுகளில் முறையே 12.86% மற்றும் 56.54% ஏற்றத்தினை கண்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2020, நிதியாண்டில் டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ மற்றும் ஜிண்டால் ஸ்டீல் 48.21%, 49.99% மற்றும் 54.22% வீழ்ச்சி கண்டுள்ளன.

துறை வாரியாக வீழ்ச்சி

துறை வாரியாக வீழ்ச்சி

மெட்டல் மற்றும் ஆட்டோ துறை மட்டும் வீழ்ச்சி காணவில்லை. ,மற்ற துறை குறியீடுகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. எனினும் அதிகபட்சமாக மெட்டல் துறை 49.69% வீழ்ச்சியுடனும், இதே ஆட்டோமொபைல் துறை 42.92% வீழ்ச்சியுடனும், இதே கேப்பிட்டல் குட்ஸ் 40.56%, வங்கி குறியீடு 35.42%ம் ரியால்டி இன்டெக்ஸ் 34.83% வீழ்ச்சியுடனும், இதே ஆயில் & கேஸ் 34.37% வீழ்ச்சியுடனும் வீழ்ச்சி கண்டுள்ளன.

ஆலைகள் மூடல்

ஆலைகள் மூடல்

இதற்கிடையில் Hindustan Zinc தனது அத்தியாவசிய தேவை தவிர அனைத்து ஆலைகள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் அனைத்தையும் முடங்கியுள்ளது. இதோபோல் Hindalco நிறுவனமும் தனது அத்தியாவசிய தேவை தவிர அனைத்து ஆலைகள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் அனைத்தையும் மூடியுள்ளது.

வாகன இயக்கத்தினை பொறுத்தே விற்பனை

வாகன இயக்கத்தினை பொறுத்தே விற்பனை

இதே ferro alloys போன்ற நிறுவனங்கள் சாலை இயக்கத்தினை அடிப்படையாக கொண்டு இருப்பதால், தற்போது அதன் செயல்பாட்டைக் குறைத்துள்ளது. இது மட்டும் அல்ல அடுத்த 7 -10 நாட்களில் ஆலைகளின் செயல்பாட்டினைக் கணிசமான அளவு குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொஞ்சம் ஏற்றம்

கொஞ்சம் ஏற்றம்

ஆக இதுபோன்ற பல காரணங்களில் மெட்டல் பங்குகள் 2021ம் நிதியாண்டில் வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது. இதற்கிடையில் பிஎஸ்இ ஆட்டோமொபைல் துறை குறியீடு, 2019ம் நிதியாண்டில் 21.75% வீழ்ச்சியுடனும், இதே 2018 & 2017ம் நிதியாண்டில் முறையே 9.29% மற்றும் 22.28% ஏற்றத்துடனும் காணப்பட்டது.

வாகன பங்குகள் வீழ்ச்சி

வாகன பங்குகள் வீழ்ச்சி

இந்த காலத்தில் (2020ம் நிதியாண்டில் ) டாடா மோட்டார்ஸ் 59.24% வீழ்ச்சியுடனும், மகேந்திரா & மகேந்திரா 57.58% வீழ்ச்சியுடனும், அசோக் லேலண்ட் 52.85% வீழ்ச்சியுடனும் காணப்பட்டது. இப்படி ஒரு நிலையில் வாகன உற்பத்தியாளர்கள் சரக்கு இருப்பு, பலவீனமான பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் பிஎஸ் 6 மாற்றம், கொரோனா தொற்று காரணமாக வாகனத்துறையானது கடுமையான வீழ்ச்சி கண்டது. குறிப்பாக தனியார் வாகனத் தொழில் 45% அதிகமாக சரிவை சந்திக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Metal and auto stocks were worst hit in FY20 amid coronavirus pandemic

Auto stocks and metal stocks were the worst hit in the just-ended financial year as investors’ dumped equities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X