சமூக வலைத்தள துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் மெட்டா நிறுவனம், தனது முதல் இந்திய டேட்டா சென்டரை சென்னையில் அமைக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் மெட்டா தனது டேட்டா சென்டரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து சென்னையில் இருக்கும் ரிலையன்ஸ் கேம்பஸ்-ல் அமைக்க உள்ளது முக்கியமான விஷயம்.

இந்தியாவில் வேகமாக வளரும் டெக் நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை, அடுத்த 10 வருடத்தில் குட்டி சான் பிரான்சிஸ்கோ-வாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மட்டும் அல்லாமல் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
சென்னையில் அடுத்தடுத்து பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறது, இதை கவனித்த கௌதம் அதானி பல வருடங்களுக்கு முன்பே சென்னையில் தனது டேட்டா சென்டர் பிஸ்னஸ்-ஐ துவங்கினார். பின்னாளில் வந்த ரிலையன்ஸ் தனக்கே உரிய வகையில் மெகா கூட்டணி உடன் தனது டேட்டா சென்டரை சென்னையில் துவங்க உள்ளது.
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி விரைவில் சென்னையில் தங்கள் நிறுவனத்தின் டேட்டா சென்டரை அமைக்க உள்ளதாக அறிவித்தார். இதன் பின்பு அம்பானி குடும்பம் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சென்ட் திருமண முன்வைபோக நிகழ்ச்சியில் பிசியாகிவிட்டது என நினைத்தால் இங்க தான் மொத்த டீலும் முடிந்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க், அண்மையில் குஜராத் ஜாம்நகரில் நடந்த அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்வின் போது தான் சென்னை டேட்டா சென்டருக்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் மெட்டா ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெட்டாவின் முன்னணி ஆப்களில் இருக்கும் யூசர்கள் உருவாக்கிய கன்டென்ட்-ஐ உள்நாட்டில் இருந்தே ஆக்சஸ் செய்துகொள்ள முடியும்.
சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட (MAA10) வளாகத்தை, டேட்டா சென்டர் அமைப்பதற்காக Brookfield Asset Management, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் Digital Realty ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். இது 100 மெகாவாட் (MW) ஐடி திறன் கொண்ட டேட்டா சென்டராகும்.
தற்போது, இந்திய பயனர்களின் தரவுகள் சிங்கப்பூரில் உள்ள மெட்டா நிறுவனத்தின் தரவு மையத்தில் பராமரிக்கப்படுகிறது. உள்ளூர் தரவு மையம் இருந்தால், கன்டென்ட் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த முடியம்.
சென்னை டேட்டா சென்டர் பயன்பாட்டுக்கு வந்தால், சிங்கப்பூரில் இருக்கும் இந்திய பயனர்களின் தரவுகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றப்படும். ஆனால் மெட்டா-வின் திட்டம் இதுமட்டுமா என்பது தான் பெரிய சந்தேகமே.
பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகள் மீதான அரசின் கண்காணிப்பு கடுமையாக இருப்பதால், மெட்டா நிறுவனம் இதுபோன்ற செயல்பாடுகளை உள்ளூர் அளவில் இயக்க இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மெட்டா நிறுவனத்தின் Llama என்னும் ஓப்பன்-சோர்ஸ் லார்ஜ் லேங்குவேஜ் மாடல்-ஐ இந்திய நிறுவனங்களை அதிகம் பயன்படுத்த ஊக்குவித்து வரும் மெட்டா, சென்னை டேட்டா சென்டர் இதற்கு அடித்தளமாக இருக்கும்.
மேலும் மெட்டா நிறுவனத்திற்குச் சென்னையில் இந்த டேட்டா சென்டர் அமைப்பது மூலம் உலகளாவிய தரவு மையங்களில் இருந்து பரிமாற்ற செலவைக் குறைக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை டேட்டா சென்டரை அடிப்படையாக வைத்து, மெட்டா நிறுவனம் இந்தியா முழுவதும் பல இடங்களில் நான்கு முதல் ஐந்து தரவு மையங்களை இயக்க முடியும். விரைவில் மும்பை, ஹைதராபாத், டெல்லி என்சிஆர் பகுதியில் டேட்டா சென்டர் உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications