ஒரு சாதனை என்பது தலையெழுத்து அல்ல. அதுவே பெரியதொரு முன்னெடுப்பின் தொடக்கமாக இருக்கலாம். இது மெட்ரோ பிராண்டு தலைவர் ரபீக் மாலிக்குக்கு சிறப்பாகப் பொருந்தும். ஒரு சிங்கிள் பிராண்டு ஷூ கடை வைத்திருந்த ரபீக் கடுமையான உழைப்பினால் ரூ.23,000 கோடி நிறுவனத்துக்கு அதிபரானார்.
மெட்ரோ பிராண்டின் பிரபல தயாரிப்புகளுக்கான மோச்சி, வாக்வே, மெட்ரோ ஷுஸ், டா வின்சி, பிளிப்பிளாப் ஆகியவை ரபீக்கின் தயாரிப்புகளாகும். ஒரு சிங்கிள் கடையில் தொடங்கிய ரபீக்கின் தொழில் சாம்ராஜ்ஜியம் இப்போது இந்தியாவில் 164 நகரங்களில் 720 கிளைகளுடன் இயங்கி வருகிறது.

போர்ப்ஸ் தகவல்படி ரபீக் மாலிக்கின் நிகர சொத்து மதிப்பு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கோடீஸ்வரராக மாறிவிட்ட ரபீக்கின் வாழ்க்கையை சாதிக்கத் துடிக்க நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டும். இந்திய காலணி மார்க்கெட்டை அவரது தயாரிப்புகள் ஆக்கிரமித்துள்ளன.
ரபீக் மாலிக்கின் தந்தை மாலிக் தேஜானி மெட்ரோவை மும்பையில் கடந்த 1955 ஆம் ஆண்டில் தொடங்கினார். சிங்கிள் கடையை ரபீக் மிகப் பெரிய கம்பெனியாக விரிவுபடுத்தினார். தனது பிராண்டை பிரமாண்டமாக மாற்றுவதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கினார்.
பேஷன் ஆக்ஸசரிகள் மற்றும் காலணி சில்லறை விற்பனையாளர்ககளை உருவாக்கினார். மெட்ரோ பிராண்டின் பிரபல தயாரிப்புகளான மோச்சி, வாக்வே, மெட்ரோ ஷூஸ், டா வின்ஸி, பிளிப்பிளாப் ஆகியவற்றின் விற்பனை சக்கைப் போடு போட்டது.
ரபீக்கின் மகள் ஃபாரா மாலிக் பான்ஜி மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். ரபீக் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர். இந்திய காலணிகள் சில்லறை விற்பனையின் மாஸ்டர் என இப்போது போற்றப்படுகிறார். அவரது நம்பிக்கைகள், ஒழுக்கம், அயராத உழைப்பு மெட்ரோ பிராண்டு நிறுவனத்தை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றது.
ரபீக்கின் வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. அவர் எப்போதும் புதிய அறிமுகம், சாதனைகளைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பார். ரூ.1367 கோடி ஐபிஓவை கடந்த 2021 டிசம்பரில் வெளியிட்டு தனது நிறுவனத்தை பட்டியலிட்டார்.
மெட்ரோ பிராண்ட்ஸில் மறைந்த பில்லியனர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சிறிது பங்கை வைத்துள்ளார்.
ஆஸிஸா மாலிக் என்ற பெண்ணை மணந்த ரபீக் மாலிக்குக்கு ஐந்து மகள்கள். கம்பெனியை அவரது இரண்டாவது மகள் நிர்வாகம் செய்கிறார். 2023இல் போர்ப்ஸ் தகவல்படி ரபீக்கின் நிகர சொத்து மதிப்பு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications