டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சமீபத்தில் ரெசிப்ரோக்கல் வரி மற்றும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 50 சதவீத வரி பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், தற்போது மெக்சிகோவும் இந்தியாவையும், தென் கிழக்கு ஆசிய நாடுகளையும் டார்கெட் செய்து 50 சதவீதம் வரையிலான வரியை அறிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பில் இருந்து விடுப்பட வேண்டும் என முடிவு செய்து இந்தியா அரசு தரப்பில் மெக்சிகோ உடன் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயமாக FTA ஒப்பந்தம் உள்ளது.

மெக்சிகோ அரசு, அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகளில் இருந்து வரும் 1,463 வகை பொருட்களுக்கு 5 முதல் 50 சதவீதம் வரை இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. இந்த முடிவுக்கு டிசம்பர் 11, 2025 அன்று மெக்சிகோ செனட் ஒப்புதல் பெற்று, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் அன அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெக்சிகோ அரசு இந்த வரியை இந்தியா, சீனா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்நாட்டின் ஏற்றுமகி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். மெக்சிகோ இந்த நடவடிக்கையை உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவுடன் நட்புறவை மேம்படுத்தவும், அடுத்த வருடம் நடக்கும் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மத்தியிலான நடப்புறவு ஒப்பந்தம் மறுஆய்வுக்கு வருகிறது. இதனை மையப்படுத்தி இந்த அறிவிப்பு வந்துள்ளது என சந்தை வல்லுனர்கள் தெரித்துள்ளது.
இந்திய அரசு மெக்சிகோவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மெக்சிகோ இத்தகைய மசோதாவை முதலில் தாக்கல் செய்யப்பட்டபோதே இந்தியா தனது கருத்துகளை தெரிவித்தது. இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FTA) பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக உள்ளன. இதற்கான விதிமுறைகள் (Terms of Reference) விரைவில் உறுதி செய்து அறிவிக்கப்படும். இந்தியா தனது ஏற்றுமதியாளர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உரிமை கொண்டுள்ளது என்று அரசு அதிகாரி தெரிவித்தார்.
மெக்சிகோவின் புதிய வரி பெரும்பாலும் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு செல்லும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஜவுளி, ஆடை, பிளாஸ்டிக், உலோகம், காலணி சார்ந்த பொருட்கள் அதிகளவில் பதிக்கும்.
மெக்சிகோ அரசு இந்த 1436 பொருட்களின் இறுதி பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தியா மெக்சிகோவுடன் FTA பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தினால் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும்.


Click it and Unblock the Notifications