சீனாவின் SAIC மோட்டார் கார்ப் நிறுவனம் அதன் இந்திய கிளை நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், பங்கு விற்பனை வாயிலாகவும் ஏற்கனவே இருக்கும் JSW வென்ச்சர்ஸ் சிங்கப்பூர் உட்பட இந்திய முதலீட்டாளர்களின் பங்கு விகிதத்தை உயர்த்துவதன் மூலம் இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
MG motor பிரிட்டன் பிராண்டாக இருந்தாலும் 2005 முதல் இது சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தற்போது இந்த பிராண்டின் முழு அதிகாரம் சீனாவின் SAIC மோட்டார் கார்ப்-யிடம் உள்ளது. இதேபோல் Volvo கார்களும் சீனாவின் Geely நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தும், இந்தியா - சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு இந்தியாவில் இயங்கி வரும் சீன நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாமல் தவித்தது.
இந்த நிலையில் தான் SAIC மோட்டார், எம்ஜி மோட்டார் இந்தியா-வில் பெரும் பெரும் பகுதி பங்குகளை JSW குழுமத்திற்கு விற்பனை செய்து, இந்தியர்களால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனமாக மாற்றியது. ஆனால் அரசின் கட்டுப்பாடுகளுக்கு இது போதாது என்பதால் கூடுதலாக இந்திய நிறுவனங்களுக்குத் தனது பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
SAIC மோட்டார் - JSW குழுமத்திற்கு மத்தியில் நடந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, JSW வென்ச்சர்ஸ்-ன் கிளை நிறுவனமான JSW இன்டர்நேஷனல் ட்ரேட்கார்ப் ப்டிஈ லிமிடெட், எம்ஜி மோட்டார் இந்தியாவில் மொத்தம் 35% பங்குகளை 3577 கோடி ரூபாய் தொகைக்கு வாங்கியது. இதை தொடர்ந்து தான் MG Motor India Pvt Ltd என்ற பெயரை JSW MG Motor India Pvt Ltd என மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது SAIC நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவில் எம்ஜி பிராண்டின் வர்த்தக சந்தை பங்கைத் தொடர்ந்து அதிகரிக்கும் முக்கிய இலக்குடன், இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இயக்க ஆபத்துகளைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளோம். இந்தியாவில் MG Motor-க்கு நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான சாதகமான சூழலை உருவாக்கக் கூடுதலாக உள்ளூர் இந்திய முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்" என்று SAIC நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்புதிய முடிவின் படி IndoEdge India Fund நிறுவனம் 818 கோடி ரூபாய்க்கு எம்ஜி மோட்டார் இந்தியாவில் 8% பங்குகளை வாங்கவுள்ளது. இதேபோல் எம்ஜி மோட்டார்ஸ்-ன் டீலர் டிரஸ்ட் ஒன்று 307 கோடி ரூபாய்க்கு 3% பங்குகளை வாங்க உள்ளது. அதே நேரத்தில் ஊழியர் பங்கு உரிமை திட்டத்தின் கீழ் 511 கோடி ரூபாய் மதிப்பிலான 5% பங்குகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் எம்ஜி மோட்டார்ஸ்-ன் 51 சதவீத பங்குகள் இந்திய முதலீட்டாளர்கள் கையில் வர உள்ளது.
இந்த நடவடிக்கை எம்ஜி மோட்டார் இந்தியாவின் பங்குதாரர் கட்டமைப்பில், இந்திய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் அடையச் செய்வது மட்டுமல்லாமல், இந்திய சந்தையில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான மூலதனத்தையும் வழங்கும்.
JSW வென்ச்சர்ஸ் போன்ற வலுவான இந்திய கூட்டாளியுடன் இணைவது, எம்ஜி மோட்டார் இந்தியாவுக்கு வாகனத் துறையில் பெரும் மாற்றத்தை அறிவிக்கும். குறிப்பாக JSW நிறுவனத்தின் ஒடிசா மாநிலத்தில் மின்சார கார் தயாரிப்பாகத் துவங்கியுள்ள புதிய தொழிற்சாலையும், SAIC மோட்டார்ஸ்-ன் எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பமும் புதிய போட்டியை இந்திய சந்தையில் உருவாக்கும்.
இந்த புதிய முதலீட்டாளர்களின் வருகை எம்ஜி மோட்டார் இந்தியாவின் இந்திய சந்தை வளர்ச்சி திட்டங்களைத் துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த சில மாதத்தில் MG Motor-ன் புதிய அவதாரத்தைப் பார்க்க முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications