குஜராத்துக்கு ஜாக்பாட் தான்.. எம்ஜி மோட்டார்ஸ் சொன்ன செம விஷயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் காரணமாக காற்று வாங்கிக் கொண்டிருந்த வாகன நிறுவனங்கள், இழப்பினையும் சரி செய்ய முதல் கட்டமாக வாகன விலையினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையில் பல நிறுவனங்களும் தற்போது விரிவாக்கம் செய்ய முதலீடு செய்ய தொடங்கியுள்ளன.

அந்த வகையில் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் மூலதன செலவு அதிகரிப்பு, உள்ளிட்ட பல செலவுகளை கருத்தில் கொண்டு அதன் விலையினை அதிகரித்தது.

இந்த நிலையில் தற்போது 2,500 கோடி ரூபாய் நிதியினை அடுத்த ஆண்டிற்குள், குஜராத்தில் உள்ள ஹலோல் பிளாண்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விற்பனை உச்சம் தொடும்

விற்பனை உச்சம் தொடும்

தற்போது இந்த நிறுவனம் எஸ்யூவி ரக கார்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்து வருகின்றது. இது தற்போது உலகம் முழுக்க நிலவி வரும் சிப் பற்றாக்குறைக்கு மத்தியில், கடந்த ஆண்டில் மோசமான விற்பனையை கண்டிருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் எம் ஜி மோட்டார்ஸ் விற்பனையானது 100% அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றது.

தொடர்ந்து முதலீடு

தொடர்ந்து முதலீடு

இது குறித்த அறிக்கையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் நாங்கள் ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாய் நிதியினை முதலீடு செய்துள்ளோம். இதற்கிடையில் தற்போது மீண்டும் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனையும் சேர்க்கும்போது மொத்தம் 5,500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்வோம் என இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ராஜீவ் சாபா கூறியுள்ளார்.

தொடர்ந்து விரிவாக்கம்

தொடர்ந்து விரிவாக்கம்

தொடர்ந்து சந்தையில் இதன் விரிவாக்கம் செய்வோம். முதலில் இந்த முதலீடு மூலம் உற்பத்தியினை அதிகரிப்போம். சந்தையில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவோம். குறிப்பாக நடத்தர அளவிலான எஸ்யூவி ரக காரினை, வரவிருக்கும் தீபாவளிக்கு சந்தைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய உற்பத்தி நிலவரம்

தற்போதைய உற்பத்தி நிலவரம்

அடுத்த ஆண்டில் மூலதன பொருட்கள் சப்ளையை பொறுத்து, நாங்கள் எங்களது உற்பத்தியினை செய்வோம். அடுத்த ஆண்டில் நாங்கள் ஒரு மாதத்திற்கு 7,000 யூனிட்களை உற்பத்தி செய்ய தொடங்குவோம் என சாபா தனது அறிக்கையில் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் நிறுவனம் ஒரு மாதத்திற்கு சுமார் 4,000 - 4,500 யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

மூலதன பொருட்கள் பற்றாக்குறை

மூலதன பொருட்கள் பற்றாக்குறை

தற்போதைய நிலையில் சந்தையில் பல மூலதன பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. குறிப்பாக செமிகண்டக்டர் உள்பட பலவற்றிற்கு தேவை இருந்து வருகின்றது. ஆனால் சப்ளை இல்லை. இதனால் இது எங்களின் உற்பத்தி திறனை கட்டுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 3500 - 4000 யூனிட்களாக உற்பத்தி குறைந்துள்ளது. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் 5000 யூனிட்கள் வரை கூட உற்பத்தி செய்யலாம்.

எம்ஜி மோட்டார்ஸின் திட்டம்

எம்ஜி மோட்டார்ஸின் திட்டம்

கடந்த 2018ம் ஆண்டில் நிறுவனம் ஐந்து முதல் ஆறு வருட காலப்பகுதியில் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தோம். இது ஹலோல் ஆலை முதல் கட்டத்தில் ஒரு வருடத்தில் 80,000 முதல் 1 லட்சம் யூனிட்களை வருடத்திற்கு உற்பத்தி செய்து கொண்டுள்ளது. இது இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் மூலம் 2 லட்சம் யூனிட்களாக அதிகரிக்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் இலக்கு எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசமான நிலை தொடரலாம்

மோசமான நிலை தொடரலாம்

செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக தற்போது உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது மேம்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக எதுவும் மாறவில்லை. இது இன்னும் ஆறு மாத காலத்திற்காவது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

கொரோனாவின் காரணமாக பல துறைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கேமிங், ஸ்மார்ட் கேஜெட்டுகள் மற்றும் லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் செமிகண்டக்டர்கள் தேவை அதிகமாக உள்ளது. இதனால் இதன் தேவை அதிகரித்துள்ளது எனவும் சாபா தெரிவித்துள்ளார்.

பலவித பிரச்சனைகள்

பலவித பிரச்சனைகள்

ஆட்டோமொபைல் துறையில் வெறும் 10% மட்டுமே செமிகண்டக்டர்களின் தேவை உள்ளது. இது மற்ற துறைகளில் 90% தேவை உள்ளது. அதோடு சிப்களின் பற்றாக்குறையும் நிலவி வருகின்றது. மேலும் தற்போது விநியோக சங்கிலி தடைபடும் விதமாக தற்போது லாகிஸ்டிக்ஸ் துறையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஷிப்பிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

கடந்த ஆண்டிற்கான விற்பனை குறித்து பேசியவர் கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக விற்பனை மோசமான பாதிப்பினை கண்டது. எனினும் இது தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாஷ் அவுட் ஆனது. ஆனால் இந்த ஆண்டில் அப்படியில்லை. 2020ம் ஆண்டினை விட 2021ல் நாங்கள் வளர்ச்சியினை எதிர்பார்க்கிறோம்.

வளர்ச்சி இலக்கு

வளர்ச்சி இலக்கு

எம்ஜி மோட்டாரை பொறுத்த வரையில் நாங்கள் கடந்த ஆண்டினை காட்டிலும் 20% வளர்ச்சியினை எதிர்பார்க்கிறோம். நாங்கள் இன்னும் அதிகமாக செய்ய வேண்டிள்ளது. கடந்த ஆண்டினை காட்டிலும் 75% -முதல் 100% இலக்கு வைத்துள்ளோம். இது பல மூலதன பொருட்கள் பற்றாக்குறை நிலவி வரும் இந்த சமயத்திலும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.

விலை அதிகரிப்பு

விலை அதிகரிப்பு

சமீபத்தில் தான் எம்ஜி மோட்டார் கார்களின் விலையை அதிகரித்தது. இதனால் இதன் வருவாயும் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் 28,162 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 25,834 Hector SUV வாகனங்களையும், 1,243 ZS EV வாகனத்தையும், இது தவிர 1,085 premium SUV Gloster வாகனத்தையும் விற்பனை செய்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MG motor plans to invest Rs.2,500 crore by 2022 in Gujarat plant

Leading automobile firm MG motor plans to invest Rs.2,500 crore by 2022 in Gujarat plant. Its plans to boost up production
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X