Windsor - எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்யும் புதிய எலக்ட்ரிக் கார்.. அடடா படு மாஸா இருக்கே!!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் தங்களுடைய முதல் எலக்ட்ரிக் சியுவி (crossover utility vehicle (CUV)) கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்றைய தினம் எம் ஜி மோட்டார் இந்த காரை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இது குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய மூன்றாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது. இதற்கு விண்ட்சார் (Windsor) என பெயர் சூட்டியுள்ளது. சீனாவில் விற்பனையாகி வரக்கூடிய கூலிங் கிளவுட் எலக்ட்ரிக் வாகனத்தை போன்ற வடிவமைப்பை கொண்டது தான் விண்ட்சார். இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் இந்த காரின் விலை புதன்கிழமை அன்று அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Windsor - எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்யும் புதிய எலக்ட்ரிக் கார்.. அடடா படு மாஸா இருக்கே!!

இதன் விலை சுமார் 20 லட்சம் ரூபாய் என்று அளவில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. விண்ட்சார் காருக்கு போட்டியாக தற்போது சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon EV) ,மகேந்திரா எக்ஸ்யூவி 400 ( Mahindra XUV400 )மற்றும் பிஒய்டி நிறுவனத்தின் இ-மேக்ஸ் 7 ஆகிய கார்கள் இருக்கின்றன.

எம் ஜி மோட்டார் இரண்டு பேட்டரி கொண்ட எலக்ட்ரிக் காராக விண்ட்சாரை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்று 50 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. அதே போல 38 kWh பேட்டரி திறன் கொண்ட கார் வகையும் இதில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தாலே 50 kWh கொண்ட கார் 450 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். அதேவேளையில் 38 kWh கொண்ட கார் 360 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக் கூடியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எம் ஜி மோட்டார் நிறுவனத்தை பொறுத்தவரை தற்போது சந்தையில் இருக்கும் எலக்ட்ரிக் கார்களில் இல்லாத பல்வேறு புதிய அம்சங்களை இந்த காரில் அறிமுகம் செய்திருப்பதாக தெரிகிறது.

உதாரணமாக காரின் இரண்டாவது வரிசையில் இருக்கும் இருக்கைகள் 135 டிகிரி வரை சாய கூடிய வசதி கொண்டதாக இருக்கிறது. அதேபோல பின்பக்கத்தில் இருக்கும் மூன்று இருக்கைகளுமே தனித்தனியாக ஹெட் ரெஸ்ட்டுகளை கொண்டுள்ளன. அதேபோல ஹேண்ட் ரெஸ்ட் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டேஷ் போர்டு மிகப்பெரிய டச் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும். அதாவது 15.6 அங்குல டச் ஸ்கிரீன் கொண்ட காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் எளிதாக சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி இதில் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே 8.8 அங்குலமாக இருக்கும் எனவும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் இருக்கின்றன.

MG motor பிரிட்டன் பிராண்டாக இருந்தாலும் 2005 முதல் இது சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தற்போது இந்த பிராண்டின் முழு அதிகாரம் சீனாவின் SAIC மோட்டார் கார்ப்-யிடம் உள்ளது. இதேபோல் Volvo கார்களும் சீனாவின் Geely நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தும், இந்தியா - சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு இந்தியாவில் இயங்கி வரும் சீன நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாமல் தவித்தது.

இந்த நிலையில் தான் SAIC மோட்டார், எம்ஜி மோட்டார் இந்தியா-வில் பெரும் பெரும் பகுதி பங்குகளை JSW குழுமத்திற்கு விற்பனை செய்து, இந்தியர்களால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனமாக மாற்றியது. ஆனால் இது அரசின் கட்டுப்பாடுகளுக்கு இது போதாது என்பதால் கூடுதலாக இந்திய நிறுவனங்களுக்குத் தனது பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த பங்கு விற்பனைக்கு பின்பு JSW குழுமம் எம்ஜி மோட்டார்ஸ் நிர்வாகத்தை கையில் எடுத்த பின்பு அறிமுகம் செய்யப்படும் முதல் காராக விண்ட்சார் (Windsor) வருகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+