MG Windsor EV காரின் BAAS பேட்டரி வாடகை திட்டம்.. உண்மையில் லாபகரமானதா..?

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான MG மோட்டார் இந்தியா-வில் JSW குழுமம் பங்குகளைக் கைப்பற்றிய பின்பு முதல் முறையாக அறிமுகம் செய்யும் கார் MG Windsor EV. இந்த கார் நேற்று அதிகாரப்பூர்வமாக வெறும் ரூ.9.99 லட்சத்துக்கு அறிமுகம் செய்து ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.

ஒரு எலக்ட்ரிக் கார் வெறும் 9.99 லட்சம் ரூபாய் என்ற அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையுடன் வருவது சந்தையில் பல ஒப்பீட்டைக் கொண்டு வந்துள்ளது. அதன் விலைப்படி பார்த்தால் Tata Punch EV உடன் போட்டிப்போடுகிறது, ஆனால் அதன் அம்சங்கள், திறன்கள் அனைத்தும் விலை உயர்ந்த Tata Nexon EV மற்றும் Mahindra XUV400 ஆகியவற்றிற்கு போட்டிப்போடுகிறது.

MG Windsor EV காரின் BAAS பேட்டரி வாடகை திட்டம்.. உண்மையில் லாபகரமானதா..?

Windsor EV காரை மலிவான விலைக்கு அறிமுகம் செய்ய முக்கியமான காரணம் எம்ஜி மோட்டார்ஸ் இந்த காருக்கு கொண்டு வந்துள்ளது BAAS எனப்படும் பேட்டரி-எஸ்-எ-சர்வீஸ் என்னும் வாடகை திட்டம் தான். இந்த தனித்துவமான வாடகை திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் வாகனத்தின் விலையில் இருந்து பேட்டரியின் விலையைப் பிரிக்க உதவுகிறது.

BaaS எவ்வாறு செயல்படுகிறது?: BaaS திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ரூ.9.99 லட்சத்துக்கு Windsor EV ஐ வாங்கி, பேட்டரி பயன்பாட்டிற்கு ஒரு கி.மீ.க்கு ரூ.3.5 என்ற வாடகை கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது காரை பணம் கொடுத்த சொந்தமாக்கிக்கொள்ள முடியும், ஆனால் பேட்டரி-யை சொந்தமாக வாங்காமல் வாடகை அடிப்படையில் பயன்படுத்த முடியும்.

எலக்ட்ரிக் வாகனங்கள் பொருத்த வரையில் பேட்டரி-யின் ஆயுட்காலமும், ரேஞ்ச் அச்சமும் தான் பெரிய கேள்வியாகவே இருந்தது. இந்த நிலையில் பேட்டரி-யின் ஆயுட்கால பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டதாக எம்ஜி மோட்டார்ஸ் கூறுகிறது. இந்த பேட்டரிக்கு முதல் கார் ஓனருக்கு வாழ்நாள் முழுக்க பேட்டரி மீது வாரண்டி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. 2வது ஓனருக்கு வாரண்டி காலம் 3 வருடம் அல்லது 45000 கிலோமீட்டர் என குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

MG Windsor EV காரின் BAAS பேட்டரி வாடகை திட்டம்.. உண்மையில் லாபகரமானதா..?

இந்த BAAS திட்டம் வாயிலாக ஒருவர் கார் வாங்கும் போது இக்காரின் இயக்கவிலை கிலோமீட்டருக்கு 4.5 ரூபாயாக இருக்கும், இதுவே ICE இன்ஜின் கொண்ட வாகனங்களின் இயக்கச் செலவு கி.மீ.க்கு ரூ.8-10 ஆக இருக்கும் வேளையில் இது மிகவும் குறைவாக உள்ளது.

கி.மீ.க்கு ரூ.3.5 என்ற வாடகை கட்டணம் மாதந்தோறும் சராசரியாக 1,500 கி.மீ. பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன் பொருள் கூடுதல் பேட்டரி வாடகை செலவு இருந்தாலும், Windsor EV இன் ஒட்டுமொத்த இயக்கச் செலவு ICE வாகனத்தின் இயக்கச் செலவை விட குறைவாகவே இருக்கும் என்றும் இந்த உதாரணத்தின் மூலம் கூறப்படுகிறது.

முக்கிய பிரச்சனை: Windsor EV காரை 9.99 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு, பேட்டரிக்காக கி.மீ.க்கு ரூ.3.5 செலுத்தினாலும், இந்த காருக்கு ரீசார்ஜ் செய்யும் தொகை தனியாக நாம் செலவிட வேண்டியிருக்கும், இதையும் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக சென்னை மாநகரில் வீட்டில் ரீசார்ஜ் செய்தால் ஒரு யூனிக்-க்கு 6.5 ரூபாய், பப்ளிக் ரீசார்ஜ் தளத்தில் 7-10 ரூபாய், டிசி பாஸ்ட் சார்ஜிங் எனில் 15 -24 ரூபாய்.

இதேபோல் 1500 கி.மீ அதிகமாக ஒரு மாதத்தில் பயணித்தால் 3.5 ரூபாய் என்ற கட்டணம் அதிகரிக்குமா..? அதிகரித்தால் எவ்வளவு அதிகரிக்கும் என்பது போன்ற தகவல்களை எம்ஜி மோட்டாஸ் தெரிவிக்கவில்லை.

BaaS இன் நன்மைகள்: வாகனத்தின் விலையையும் பேட்டரியின் விலையையும் பிரிப்பதன் மூலம், BaaS வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் கார்களை மிகவும் மலிவான விலையில் ஒருவரால் வாங்க முடியும்.

BaaS வாடிக்கையாளர்கள் பேட்டரி பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் பணம் செலுத்தும் வகையில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இதனால் பயன்பாட்டுக்கு ஏற்ப பணம் செலுத்தில் பட்ஜெட்டில் வாகன பயன்பாட்டை நகர்த்த முடியும். இந்த திட்டம் மூலம் எலக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் பேட்டரி உரிமை மற்றும் பராமரிப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

கூடுதல் அம்சங்கள்: Windsor EV ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு MG ஆரம்பத்தில் ஒரு வருடம் இலவச வேகமான சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

MG Windsor EV காரின் BAAS பேட்டரி வாடகை திட்டம்.. உண்மையில் லாபகரமானதா..?

மேலும் எம்ஜி நிறுவனத்தின் மெயின்டனென்ஸ் திட்டத்தை வாங்குவோருக்கு 3 வருடத்திற்குப் பின்பு 60 சதவீதம் பைபேக் மதிப்பை வழங்கு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

போட்டி அதிகரிக்கும்எம்ஜி மோட்டார் Windsor EV காருக்கு அறிமுகம் செய்துள்ளது, அதன் பேட்டரி-எஸ்-எ-சர்வீசஸ் மாடல், இந்திய EV சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற EV நிறுவனங்கள்: இந்த மாடல் மூலம் எலக்ட்ரிக் கார்களை மிகவும் மலிவான மாற்றுவதன் மூலம், MG இந்தியாவில் அதிக வர்த்தகத்தைப் பெறும். மேலும் இந்த மாடல் வெற்றிகரமாக அமைந்தால் பிற நிறுவனங்களும் இந்த முறையை பயன்படுத்த வழி வகுக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+