ஒரே வாரத்தில் 50 லட்சம் போன்கள் விற்பனை.. ஜியோமியின் அதிரடி சாதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள், இந்தியாவில் விழாக்காலம் தொடங்குவதற்கு முன்னரே அவர்களின் விற்பனை விழாவினை கொண்டாடி விடுகின்றனர். இது வருடா வருடம் நடக்கும் ஒரு செயல் தான். அதாவது பண்டிகை காலத்திற்கு முன்னதாக பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள், தங்களது விற்பனை திருவிழாவினை நடத்தி விடுகின்றன.

ஒரே வாரத்தில் 50 லட்சம் போன்கள் விற்பனை.. ஜியோமியின் அதிரடி சாதனை..!

இந்த விழாக்கால விற்பனையில், வழக்கம்போல சீனாவின் ஜியோமி நிறுவனமே கல்லா கட்டியுள்ளது. பொதுவாக இந்த விழாக்கால விற்பனையில் அதிக விற்பனை என்பது ஸ்மார்ட்போன்கள் தான். ஏனெனில் பலவகையான தள்ளுபடிகள், விலை சலுகை, கிரெடிட் கார்டு சலுகை, இஎம்ஐ ஆப்சன், பே லேட்டர் ஆப்சன் இப்படி பற்பல ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளனவே. இதனால் வழக்கத்தினை விட, இந்த விழாக்கால மெகா ஷாப்பிங் திருவிழாவில் இந்த நிறுவனங்கள் வழக்கம்போல் தூள் கிளப்பியுள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த விழாக்கால விற்பனையில், ஒரே வாரத்தில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை, சீனாவில் ஜியோமி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கடந்த அக்டோபர் 16 அன்று தங்களது விழாக்கால சலுகையினை ஆரம்பித்து, அக்டோபர் 22 வரை விற்பனை செய்தன.

இங்கு ஜியோமியின் பிரியர்கள் அவர்களுக்கு பிடித்தமான போனை சலுகை விலையில் பெற முடிந்தது. பலத்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் 15,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தவிர Mi.comமிலும் நுகர்வோர் ஸ்மார்ட்போன்களை வாங்க முடிந்தது.

ஜியோமி நிறுவனம் 15,000 சில்லறை வர்த்தகளுடன் இணைந்து, கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு சரியான சான்றே 50 லட்சம் ஸ்மார்ட்போன் விற்பனை தான் என்கிறது இந்த நிறுவனம். இது வாடிக்கையாளர்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகின்றது.

வேறு எந்த பிராண்டும் இதற்கு முன்பு இப்படி அசுர வளர்ச்சியினை கண்டிருக்கவில்லை. மேலும் நாங்கள் இந்தியாவில் உயர்ந்த தரத்தினையும், சரியான நேர்மையான விலையில் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும் ஜியோமின் இந்திய தலைமை வணிக அதிகாரி ரகு ரெட்டி கூறியுள்ளார்.

கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் படி, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையானது கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 1.8 கோடியாக இருந்தது. ஜியோமி இந்தியா மூன்று மாத காலத்தில் சுமார் 52 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த நிறுவனத்தின் சில்லறை வர்த்தக பங்காளிகள், நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப சேவை செய்ய உதவியதாக ஜியோமி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mi india sells 50 lakh smartphones in a week during festival sale

China’s Mi india sells 50 lakh smartphones in a week during festival sale
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X