உலகின் டெக் நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாக கூகுள் நிறுவனம் திகழ்கிறது. ஏஐ தொழில்நுட்பம் தொடங்கி அனைத்து சேவைகளிலும் கூகுள் நிறுவனம் தொடர்ந்து தன்னை முன்னிலை நிறுவனமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது . கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை.
தற்போது சுந்தர் பிச்சை எடுத்து இருக்கக்கூடிய ஒரு முடிவுதான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஒரு பேசு பொருளாக மாறி இருக்கிறது. கூகுள் நிறுவனம் பத்திரங்களை வெளியிட்டு தங்கள் நிறுவனத்திற்கு நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இதற்காக பத்திரங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறது. இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 100 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி 100 ஆண்டு கால பத்திரங்களை விற்பனை செய்வது மிகப்பெரிய ஆபத்து என்கிறார் பிரபல முதலீட்டாளர் மைக்கேல் பரி. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை முன் கூட்டியே கணித்தவர் தான் மைக்கேல் பரி. இவர் வெளியிட்டிருக்கக்கூடிய எக்ஸ் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
100 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட பத்திரங்களை வெளியிட கூகுள் திட்டமிட்டுள்ளது இதற்கு முன்பு ஒரு நிறுவனம் இதே போன்ற செயலில் ஈடுபட்டது அது மோட்டரோலா. 1997 ஆம் ஆண்டு மோட்டரோலா நிறுவனம் அமெரிக்காவில் அதிக மூலதன சந்தை மூலதன மதிப்பு கொண்ட முதல் 25 நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. அமெரிக்காவின் நம்பர் 1 கார்ப்பிரேட் பிராண்டாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை.

போன்கள் சந்தை போட்டி நிறைந்ததாக மாறியது நோக்கியா மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் சந்தைக்கு வரத் தொடங்கியதால் மோட்டரோலா போன்களே தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் விற்பனை கூட நடக்காமல் இந்த நிறுவனம் வீழ்ந்துவிட்டது அவர்கள் செய்த தவறை தான் கூகுளும் தற்போது செய்ய போகிறது எனக் கூறியிருக்கிறார். கூகுள் நிறுவனம் அமெரிக்கா டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் ஸ்விசர்லாண்டிங் பிரான்க்ஸ் ஆகிய நாணயங்கள் மூலம் கோடிக்கணக்கில் பத்திரங்களை விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர், ஒரு துறையில் நாம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருக்க மாட்டோம் என்பதை தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது என்கிறார்.
மோட்டரோலா நிறுவனமே அதற்கு உதாரணம் என கூறி இருக்கிறார். கூகுள், மோட்டாரோலா வீழ்ச்சி அடைந்து விடும் என கூற வரவில்லை ஆனால் இப்படி நூறாண்டு காலத்திற்கு பத்திரங்களை வெளியிடுவது மிகப்பெரிய ஆபத்து என கூறுகிறார் . அடுத்த 10 ஆண்டுகளிலேயே நிறுவனம் எந்த நிலையில் இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications