மிக்ஜாம் சூறாவளியால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்கியது. இதனால் கார், பைக், கனரக வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. குறிப்பாக அம்பத்தூர் பகுதியில் இருக்கும் பல தொழிற்சாலைகள், தொழிற்சாலை உபகரணங்கள் என அனைத்தும் தண்ணீர் மிதக்கும் வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில் தைவான் நாட்டின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் சென்னைக்கு அருகிலுள்ள அதன் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபோன்களின் உற்பத்தியைத் திங்கள்கிழமை கனமழை காரணமாகவும், வெள்ள அபாயம் காரணமாகவும் நிறுத்தியது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மழை வெள்ளம் பல பகுதிகளில் வேகமாக வடிந்து வரும் வேளையில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் தயாரிப்புப் பணிகள் இன்றும் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் ஐபோன் அசம்பிளி பணிகளை நாளை துவங்குவதற்கான அனைத்து பணிகளும் செய்து வருகிறது பாக்ஸ்கான் நிர்வாகம்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் முதல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐபோன்களைத் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இந்தியாவில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதேபோல் சென்னையில் இருக்கும் மற்றொரு ஐபோன் அசம்பிளி தொழில்சாலையான Pegatron நிறுவனமும் ஐபோன் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு தலைநகர் சென்னை மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உற்பத்தி மையமாக இருக்கிறது. மிக்ஜாம் புயல் மழையால் மொத்த உற்பத்தியும் 2 நாட்களுக்குத் தேக்கம் அடைந்துள்ளது. இது மட்டும் இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையம் கடுமையான வானிலையைக் காரணம் காட்டி நேற்று மூடப்பட்டது.
மிக்ஜாம் சூறாவளியால் பெய்த கனமழையால் சென்னை மற்றும் இதன் அண்டை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரி விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சென்னையின் பல பகுதிகளும், அதை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால், இயந்திரம் மூலம் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் மற்றும் வெள்ளத்தை அகற்றும் பணியில் அரசும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு உள்ளனர்.
கனமழை காரணமாகச் சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications