பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிச்சலின் நிறுவனம் சென்னையில் இருக்கும் தங்களுடைய ஆலையில் பயணிகள் வாகனங்களுக்கான டயர்களை தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தங்களுடைய சென்னை ஆலையில் இதற்காக 564 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

பிரான்ஸை சேர்ந்த மிச்சலின் நிறுவனம் வாகனங்களுக்கான டயர் உற்பத்திக்கு புகழ் பெற்றது. இந்நிறுவனம் 2014ஆம் ஆண்டில் சென்னையில் ஆலையை நிறுவியது. இந்த நிலையில் பயணிகள் வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும் இதற்காக 564 கோடி முதலீடு செய்து தங்கள் ஆலையின் உற்பத்தி திறனை மேம்படுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்திய சந்தைக்கு தேவையான பொருளை தயாரிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் திட்டம் என இந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். முதலில் தங்கள் நிறுவனம் பெரிய அளவு கொண்ட வாகனங்களான எஸ்யூவி உள்ளிட்டவற்றுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்யும் என்றும் இதன் மூலம் எங்களின் தொழில்நுட்ப நவீனத்துவம் அனைவருக்கும் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டிலேயே சென்னையில் முதல் டயர் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதனை மேலும் விரிவாக்கம் செய்வோம் என கூறியுள்ளார். இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற வகையிலான புதிய வகையான டயர்களை உற்பத்தி செய்ய இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் டயர் உற்பத்தி பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து பிரிவு எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் குறிப்பிட்ட வகையிலான உயர்தர மாடல் வாகனங்களுக்கான டயர்களை மட்டுமே இதுநாள் வரை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்னையின் செயல்பாடு மிச்சலின் நிறுவனத்தின் ஆலையில் 2840 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி திறன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஆலை ஆண்டுக்கு 30,000 டன்கள் டயர்களை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆலை செயல்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 200 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்கிறது. நீடித்த நிலை தன்மை கொண்ட டயர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தங்கள் நிறுவனத்தின் இலக்கு என இந்த நிறுவனம் கூறுகிறது. 2050ஆம் ஆண்டிற்குள் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் 100 சதவீத டயர்களுமே நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை ஆலையில்க் தயாரிக்கப்படும் இந்த டயர் இந்தியாவில் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பயணிகள் வாகனங்களுக்கான முதல் டயராக இருக்கும் என தெரிவித்துள்ளது. திருவள்ளூரில் இருக்கும் சிப்காட் தொழில்பூங்காவில் தான் இந்த ஆலை டயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!



Click it and Unblock the Notifications