சென்னை: ஜனவரி முதல் ஜூலை 2024 வரையிலான காலத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகளும், கணக்கீடுகளும் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமான விஷயமாக இருந்தாலும், இந்த முறை ஆய்வின் முடிவுகள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான பஞ்ச், இந்தியாவில் அதிகம் விற்கப்படும் காராக மாறியுள்ளது. ஜனவரி முதல் ஜூலை 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 1,26,000க்கும் மேற்பட்ட டாடா பன்ச் கார்கள் விற்பனையாகி, மாருதி சுசூகி வேகன் ஆர் காரை 2வது இடத்திற்குத் தள்ளியுள்ளது.

இதன் மூலம் அதிகம் விற்கப்படும் காராக எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் மாருதி சுசூகி-யின் நீண்ட கால ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், ஜூலை மாதத்தில் பஞ்ச் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடித்தது என்று ஆட்டோ மார்க்கெட் ஆராய்ச்சி நிறுவனமான ஜாட்டோ டைனமிக்ஸ் தரவுகள் கூறுகிறது.
டாடா மோட்டார்ஸ் பஞ்ச் காரின் விற்பனையைப் பார்க்கும் போது மக்கள் மத்தியில் மாற்று எரிபொருள் பயன்படுத்தும் கார்கள் மீதான விருப்பத்தைக் கவனிக்க முடிகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 5 கார்களில் கிட்டத்தட்ட பாதி மாற்று எரிபொருள் பயன்படுத்தும் காராக உள்ளது.
டாடா பஞ்ச்-இன் மொத்த விற்பனையில் 47% எலக்டிரிக் மற்றும் சிஎன்ஜி வகைகளாக உள்ளது. அதே சமயம் சிஎன்ஜி பிரிவில், மாருதி சுசூகியின் வேகன் ஆர் காரில் சுமார் 45% கார்களை விற்பனை செய்துள்ளது. இதை தொடர்ந்து பிரெஸ்ஸா (27%) மற்றும் எர்டிகா (58%) விற்பனையில் சிஎன்ஜி பங்கு வகிக்கிறது.
டாடா பஞ்ச்-இன் வெற்றிக்கு இந்நிறுவனம் உருவாக்கிய மைக்ரோ எஸ்யூவி என்ற புதிய பிரிவு தான் காரணம் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர். மைக்ரோ எஸ்யூவி பெயருடன் வரும் டாடா பஞ்ச், எஸ்யூவி போன்ற அம்சங்களை வழங்குகிறது. மேலும், பல எரிபொருளில் கார்களை அறிமுகம் செய்தது இதன் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும்.
பஞ்ச்-இன் இரட்டை எரிபொருள் வெற்றி மற்ற கார் தயாரிப்பாளர்களால் கவனிக்கப்பட்டது, இதன் காரணமாக ஜூலை 2023 இல் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர், அதன் விற்பனை 2023 இல் 7,000 யூனிட்களிலிருந்து 2024 இல் 52,684 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாற்று எரிபொருள் தான்.
எந்தொரு தயாரிப்பாக இருந்தாலும் யாருக்காக விற்கிறோம், சரியான முறையில் அதை விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் பன்ச் காரை மைக்ரோ எஸ்யூவி என புதிய பிரிவில் அறிமுகம் செய்து, மலிவு விலை கார் என்பதால் அதிகப்படியான மாற்று எரிபொருள் ஆப்ஷன்களை கொண்டு வந்தது மூலம் அதிகப்படியான மக்களுக்கு டாடா பன்ச் விருப்பமான காராக மாறியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications