ஆன்லைன் கேமிங் துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், சீனா, கொரியா, ஜப்பான் ஆகியவை இதில் முன்னோடியாக இருக்கும் வேளையில் அமெரிக்க நிறுவனங்கள் பல முயற்சிகல் ஆதிக்க நிலையை அடைய முடியவில்லை. இந்த நிலையில் தான் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் பெரும் பண பலத்துடன் களத்தில் இறங்கியது.
2022 ஆம் ஆண்டு சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் ஆன்லைன் கேமிங் பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Activision Blizzard என்னும் நிறுவனத்தைச் சுமார் 68.7 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியது. இந்த டீல்-ஐ உலகமே கொண்டாடிய நிலையில், புதிதாக ஒரு பிரச்சனை உருவானது.

மைக்ரோசாப்ட் - Activision Blizzard மத்தியிலான இணைப்பையும், கைப்பற்றலையும் பிரிட்டன் நாட்டின போட்டிதன்மையை ஆய்வு செய்யும் வாட்ச்டாக் அமைப்பு தடை செய்தது. பல மாத போராட்டத்திற்கு பின்பு இந்த இணைப்பு மீதான தடையை நீக்கி கைப்பற்றலுக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் கொடுத்தது. இதன் மூலம் கேமிங் துறையில் மாபெரும் டீல்-ஐ மைக்ரோசாப்ட் உறுதி செய்ய உள்ளது.
ஆன்லைன் வாடிக்கையைளர்கள் அதிகம் இருக்கும் ஆன்லைன் கேமிங் துறையில் ஏற்கனவே எக்ஸ்பாக்ஸ் உடன் பல கேமிங் நிறுவனத்தை வைத்திருந்தாலும், இத்துறையில் மேலோங்கி இருக்க Activision Blizzard பெரிய அளவில் உதவி செய்யும். இதன் மூலம் Xbox விற்பனையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் கேமிங் பாஸ் சப்ஸ்கிரிப்ஷன் விற்பனையை அதிகரிக்க முடியும்.
வட அமெரிக்காவின் மிகப்பெரிய கேமிங் டெவலப்பர் நிறுவனமாக இருக்கும் Activision Blizzard கீழ் தான் ஓவர்வாட்ச், டியாப்லோ, கால் ஆப் டியூட்டி, வோர்ல்டு வார்கிராப்ட், கேன்டி கிரஷ், ஸ்டார் கிராப்ட் போன்ற பல பிரபலமான ஆன்லைன் கேம்களை வைத்துள்ளது. இதை அனைத்தையும் மைக்ரோசாப்ட் கைப்பற்றுவதன் மூலம், இவை அனைத்தையும் XBOX வாடிக்கையாளர்கள் பெற உள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Activision Blizzard கைப்பற்றலுக்கு பின்பு வருவாய் அடிப்படையில் உலகளவில் 3வது பெரிய கேமிங் நிறுவனமாக இருக்கும். முதல் இரண்டு இடத்தில் டென்சென்ட் மற்றும் சோனி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Activision Blizzard கைப்பற்றல் மூலம் மைக்ரோசாப்ட் அதன் அனைத்து டெவலப்பர்களை பெறள்ளது. இதில் முக்கியமாக Activision Publishing, Blizzard Entertainment, King அணிகளை பெற உள்ளது. இதோடு Activision Blizzard கீழ் இயங்கும் Treyarch, Raven Software, Sledgehammer Games, Beenox, Toys for Bob, Activision Shanghai Studio போன்ற அனைத்து நிறுவனங்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கைப்பற்ற உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications