உலகின் டாப் டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆயிரம் ஊழியர்களைக் கடந்த 6 மாதத்தில் பணிநீக்கம் செய்துள்ள வேளையில் தற்போதும் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
டெக் சேவை துறையில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த மாற்றத்தில் இருக்கும் வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் மைக்ரோசாப்ட் தற்போது சர்வதேச டெக் உலகை ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் தொகையை 12000 ஊழியர்கள் பணிநீக்கத்திற்குப் பின் செய்துள்ளது.
சத்ய நாடெல்லா அப்படி எந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா..?
சத்ய நாடெல்லா
அதிரடி முடிவுகளுக்குப் பெயர்போன சத்ய நாடெல்லா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI நிறுவனத்துடன் பல ஆண்டுக்கு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
OpenAI நிறுவனம்
இன்று உலகமே வியந்து பார்த்து வரும் ஆன்லைன் சேட்பாட் ஆன ChatGPT-ஐ உருவாக்கிய நிறுவனம் தான் இந்த OpenAI. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நிறுவனத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
10 பில்லியன் டாலர்
மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்ய உள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், சந்தை கணிப்புகள் மற்றும் ஆய்வுகள் படி சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
செயற்கை நுண்ணறிவு
மைக்ரோசாப்ட், OpenAI நிறுவனத்தில் ஏற்கனவே 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது, இந்த நிலையில் புதிய முதலீடுகள் மூலம் மைக்ரோசாப்ட் எதிர்கால வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், OpenAI நிறுவனம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரிகிறது.
ChatGPT அறிமுகம்
மைக்ரோசாப்ட், OpenAI நிறுவன கூட்டணியில் மனிதர்களின் கேள்விகளுக்கு டெக்ஸ்ட், இமேஜ், மற்றும் இதர மீடியா மூலம் பதில் அளிக்கிறது OpenAI நிறுவனத்தின் generative artificial intelligence. OpenAI நிறுவனத்தின் ChatGPT நவம்பர் மாதம் அறிமுகமாகிப் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய இண்டர்நெட் உலகு
OpenAI நிறுவனத்தின் artificial intelligence தொழில்நுட்பம் புதிய இண்டர்நெட் உலகை அமைக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது என்று, இதன் மூலம் புதிய கூகுள் சர்ச் இன்ஜின் முதல் போட்டோ எடிட்டர் வரையில் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என அறியப்படுகிறது.
பணிநீக்கம்
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், டெஸ்லா-வில் எலான் மஸ்க், மெட்டாவில் மார்க் ஜூக்கர்பெர்க் பணிநீக்கம் செய்த 2022 ஆம் ஆண்டிலேயே பல நூறு ஊழியர்களை முன்கூட்டியே பணிநீக்கம் செய்து செலவுகளைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தித் தனது சம்பளத்தையும், சம்பள உயர்வையும் காப்பாற்றிக் கொண்டார்.
11000 ஊழியர்களைப் பணிநீக்கம்
இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் 2வது ரவுண்டு பணிநீக்க திட்டத்தில் இந்நிறுவனத்தின் சர்வதேச அலுவலகத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்கள் அதாவது சுமார் 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இந்த 2வது ரவுண்ட பணிநீக்கத்தில் இன்ஜினியரிங் மற்றும் HR பிரிவில் இருந்த ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications