மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மருத்துவத் துறையில் புரட்சியை செய்துள்ளது, என்னடா இது, டெக் நிறுவனம் எப்படி மருத்துவ துறையில் புரட்சி செய்கிறது என்று தானே குழப்பம். ஏஐ இருக்கும்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தான் இது காட்டுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, மருத்துவர்களை விட நான்கு மடங்கு துல்லியமாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறியும் திறன் கொண்டதாகவும், மருத்துவ செலவுகளை பெரிய அளவில் குறைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எவ்வாறு உதவும், மருத்துவர்களுடன் ஒப்பிடும்போது இதன் தாக்கம் என்ன என்பதை இந்த செய்தியில் முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் இருந்து பெறப்பட்ட 304 நோய் குறித்த ஆய்வுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு "Sequential Diagnosis Benchmark" எனும் சோதனை முறையை உருவாக்கியுள்ளது.
இதை மைக்ரோசாப்ட் MAI Diagnostic Orchestrator (MAI-DxO) என அழைக்கிறது. இந்த MAI-DxO ஏஐ கருவி ChatGPT, Gemini, Claude, Llama மற்றும் Grok போன்ற முன்னணி AI மாடல்களை ஒருங்கிணைத்து, மருத்துவர்களைப் போல படிப்படியாக ஒரு நோயாளி எந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை கண்டறிந்துள்ளது.
இந்தச் சோதனையில், MAI-DxO 80% துல்லியமாக நோய் மற்றும் மருத்து சிகிச்சை முறைகளை கண்டறிந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் வெறும் 20% துல்லியத்தை மட்டுமே பதிவு செய்துள்ளனர். மேலும் ஏஐ நோய் கண்டறியும் திறன் சிறப்பாக இருக்கும் காரணத்தால் நோயை அறிந்துக்கொள்ள எடுக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளின் செலவுகளில் 20% குறைகிறது. இதனால் மருத்து சிகிச்சை முறையில் பெரும் மாற்றத்தை மைக்ரோசாப்ட்-ன் MAI-DxO மாடல் உருவாக்க உள்ளது.
மக்களுக்கு என்ன பயன்:
- இந்த AI கருவி மக்களுக்கு பல வழிகளில் உதவும். முதலாவதாக, விரைவான மற்றும் துல்லியமான நோயறிதல் மூலம், குறிப்பாக குறைந்த வசதி உள்ள பகுதிகளில், மருத்துவ சேவைகளை எளிதாக்க முடியும்.
- இரண்டாவதாக, செலவு குறைவதால், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மலிவாக கிடைக்கும்.
- மூன்றாவதாக, மருத்துவர்களின் பணிச்சுமையை குறைத்து, அவர்கள் சிக்கலான நோய்களுக்கு கவனம் செலுத்த உதவும்.
இதேபோன்ற ஏஐ தொழில்நுட்பம், அமெரிக்காவில் ஏற்கனவே ஸ்கேன் ரிப்போர்ட் அனலிஸ்-ல் தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் MAI-DxO கருவி அடுத்த கட்டத்திற்கானது. இதனால் இதை மைக்ரோசாப்ட் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமா என்பது அடுத்த முக்கியமான கேள்வி. மைக்ரோசாப்ட் ChatGPT மட்டுமே பயன்படுத்தாமல் Gemini, Claude, Llama மற்றும் Grok ஆகிய அனைத்து முக்கிய AI மாடல்களையும் இந்த MAI-DxO-வில் பயன்படுத்தியுள்ளது.
ஆனால், இதை மக்களுக்கு பயன்படுத்தவதில் சில சவால்களும் உள்ளன. இந்த ஏஐ மாடலுக்கு பயிற்சி பெற போதுமான தரவுகள் இருந்தால் மட்டுமே சரியான சேவை அளிக்க முடியும். புதிய பிரச்சனைகள், புதிய அறிகுறிகள் போன்றவை இருந்தால் இந்த ஏஐ தவறான நோயை கண்டறிந்து தவறான சிகிச்சையை பரிந்துரைக்கும் அச்சம் உள்ளது.
மைக்ரோசாஃப்ட் இந்தக் கருவியை வணிகமயமாக்குவது குறித்து முடிவு செய்யவில்லை, ஆனால் இதை பிங் தளத்தின் மூலம் ஒருங்கிணைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாலம் என தகவல் வெளியாகியுள்ளது.
மனித மருத்துவர்களை ஒப்பிடும்போது, AI துல்லியமாகவும் விரைவாகவும் நோயைக் கண்டறிய முடியும். ஆனால், மருத்துவர்களின் அனுபவம், உணர்ச்சி புரிதல் மற்றும் நோயாளிகளுடனான தனிப்பட்ட தொடர்பு AI-க்கு இல்லை. எனவே, AI ஒரு உதவி கருவியாக சிறப்பாக செயல்படும், ஆனால் மருத்துவர்களை முழுமையாக மாற்ற முடியாது என்பதை தற்போதைய நிலவரம்.
இந்தக் கருவி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியாக கூறப்பட்டாலும், காலப்போக்கில் இதன் திறன் உயரும் பட்சத்தில் பல மருத்து தவறுகளை இத்தகைய ஏஐ மூலம் தவிர்க்க முடியும். மேலும் அடுத்த 5 வருடத்திலோ, 10 வருடத்திலோ இதை மக்களின் பயன்பாட்டுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications