அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.1 லட்சம் கொரோனா போனஸ்.. மைக்ரோசாப்ட் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பல நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடிக்கும் மத்தியில் சிக்கித் தவித்து வந்த நிலையில், தற்போது தான் பல நாடுகளும் மீண்டு வரத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையில் பல நாடுகளும் தங்களது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களை காப்பாற்ற பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பல நாட்டின் அரசுகள் மக்களுக்கு நிதியுதவி, கடன் உதவி, வட்டி சலுகை, இஎம்ஐ சலுகை, வரி சலுகை என அறிவித்து வருகின்றன.

கொரோனா உதவிகள்

கொரோனா உதவிகள்

இதே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும், ஊழியர்களின் குடும்பங்களுக்கும் உதவும் வகையில் பல நிறுவனங்களும் உதவிகளை வாரி வழங்கின. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் கொரோனாவினால் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கும் பல நிவாரணங்களை அறிவித்து வருகின்றன. இப்படி ஒவ்வொரு தரப்பில் இருந்து உதவிகள் இன்றளவிலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா போனஸ்

கொரோனா போனஸ்

மொத்தத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களின் உதவும் மாபெரும் மனப்பான்மையை பார்க்க முடிந்தது. அந்த வகையில் தற்போது உலகின் ஐடி ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு பெரிய சர்பிரைஸ் ஒன்றினை அறிவித்துள்ளது. அது கொரோனா போனஸ் ஆக அதன் ஒவ்வொரு ஊழியருக்கும் 1.12 லட்சம் ரூபாய் போனஸினை (1500 டாலர்கள் ) அறிவித்துள்ளது.

யாருக்கெல்லாம்?

யாருக்கெல்லாம்?

இது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனஸ் ஆனது மார்ச் 2021 அல்லது அதற்கு முன்னர் தொடங்கிய கார்ப்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழாக உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் என அறிவித்துள்ளது.

இந்த பணியாளர்களுக்கும் உண்டு

இந்த பணியாளர்களுக்கும் உண்டு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், மைக்ரோசாப்ட்டின் இந்த சலுகையானது, பகுதி நேரமாக வேலை பார்க்கும் ஊழியர்கள் முதல் கொண்டு, மணி கணக்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை அனைவருக்கும் உண்டு என்பது தான். இந்த சூப்பரான அறிவிப்பினை மைக்ரோசாப்ட்டின் தலைமை மக்கள் அதிகாரி கேத்லீன் ஹோகன் அறிவித்துள்ளார்.

இவர்களுக்கு இந்த போனஸ் இல்லை

இவர்களுக்கு இந்த போனஸ் இல்லை

மைக்ரோசாப்ட் தற்போது சர்வதேச அளவில் 1,75,508 ஊழியர்களைக் கொண்டுள்ளது. எனினும் மைக்ரோசாப்ட்டின் துணை நிறுவனங்களான LinkedIn, GitHub and ZeniMax உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த சலுகை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த போனஸ்-காக 200 மில்லியன் டாலர் தொகையினை செலவிடவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் அலுவலகம் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

அமேசானின் சலுகை

அமேசானின் சலுகை

எனினும் மைக்ரோசாப்ட் 2 நாளில் சம்பாதிக்கும் தொகையில் இரண்டு நாட்கள் லாபத்திலும், இந்த போனஸ் குறைவானது தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், அதன் 45,000 ப்ரண்ட் லைன் ஊழியர்களுக்கு 1000 டாலர்கள் போனஸூம், ஹாலிடே போனஸ் ஆக 300 டாலர்களும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: microsoft bonus amazon
English summary

Microsoft announces Rs.1 lakh cash bonus to employees as corona bonus

Microsoft latest updates.. Microsoft announces Rs.1 lakh cash bonus to employees as corona bonus
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X