சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவைகளில் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், தற்போது இமேஜ் ஷேரிங் மற்றும் சோசியல் மீடியா நிறுவனமான பின்ட்ரெஸ்ட் நிறுவனத்தைச் சுமார் 51 பில்லியன் டாலருக்கு வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே மைக்ரோசாப்ட், பின்ட்ரெஸ்ட் நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்து, அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்தது, ஆனால் தற்போது இந்தப் பேச்சுவார்த்தை தடைபெற்று உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமுக வலைதளம்
சமுக வலைத்தளத்தில் பெருமளவிலான மக்கள் தற்போது விர்சுவல் இன்டிராக்ஷனில் அதிகளவிலான ஆர்வம் காட்டி வரும் நிலையில், பின்ட்ரெஸ்ட் நிறுவனம் இந்த மாற்றத்தின் மூலம் பெருமளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்று வருகிறது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
2020ஆம் ஆண்டில் டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் பின்ட்ரெஸ்ட் நிறுவனத்தின் மாதாந்திர ஆக்டிவ் யூசர்ஸ் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்து 459 மில்லியன் வாடிக்கையாளர் எனப் புதிய சாதனையை அடைந்தது. 2020ல் தான் இந்நிறுவனம் முதல் முறையாக 100 மில்லியன் ஆக்டிவ் யூசர்ஸ் இலக்கை அடைந்தது.
7 மடங்கு வளர்ச்சி
2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பின்ட்ரெஸ்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக வளர்ச்சி அடைந்த காரணத்தால் மார்ச் மாதத்தில் இருந்து சுமார் 7 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜோ பைடன் ஆட்சி
அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி மாற்றத்திற்குப் பின் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு வரும் டெக் நிறுவனங்கள், பெரும் நிறுவனங்களுக்குப் பைடன் ஆட்சி மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என்பதையும், வர்த்தக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகமாக இருப்பதையும் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications