உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் சமீபத்தில் புதிய கேர்ள்பிரென்ட் உடன் இருந்த போட்டோ உலகம் முழுவதும் டிரெண்டானது. பில் கேட்ஸ் விவாகரத்துக்குப் பின்பு 2023-ஐ பெரும் நம்பிக்கை உடன் துவங்குவதாகத் தனது வருடாந்திர இறுதி பிளாக்-ல் தெரிவித்தார், இதில் முக்கியமாகத் தான் தாத்தா ஆகபோகும் விஷயத்தை அறிவித்தார், இதோடு விவாகரத்துக்குப் பின்பு புதிய கேர்ள்பிரெண்ட் உடனான போட்டோ வெளியானது, இதைத் தொடர்ந்து பீர் குடிக்கும் பழக்கம் இல்லாத பில் கேட்ஸ் உலகளவில் பிரபலமான Heineken நிறுவனத்தில் பங்குகளை வாங்கியுள்ளார்.
பில் கேட்ஸ் 2023 ஆம் ஆண்டை புதிய நம்பிக்கை உடனும், நம்பிக்கை உடனும் துவங்கியது இப்புதிய முதலீடுகள் வாயிலாக உறுதியாகியிருக்கும் வேளையில் பில் கேட்ஸ் பல முதலீடுகளைச் செய்திருந்தாலும் பீர் நிறுவனத்தில் செய்துள்ள முதலீடு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பில் கேட்ஸ் Heineken நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார், எவ்வளவு பங்குகளை வாங்கியுள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நேரடி நிர்வாகப் பொறுப்பில் இருந்தும், நிர்வாகக் குழுவில் இருந்தும் வெளியேறிய மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் ரியல் எஸ்டேட் முதல் பல துறையில் பல நிறுவனத்தின் தனது சொந்த பணத்தைக் கொண்டு முதலீடு செய்து வருகிறார்.
Heineken முதலீடு
இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டின் பிரபலமான பீர் பிராண்டான Heineken-ன் ஹோல்கிங் நிறுவனத்தில் 3.76 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இந்தப் பங்குகளை Heineken நிறுவனத்திடம் இருந்து வாங்காமல் Mexico's FEMSA விற்பனை செய்த 18 மில்லியன் Heineken பங்குகளில் சுமார் 10.8 மில்லியன் பங்குகளை வாங்கியுள்லது.
FEMSA மெக்சிகோ
மெக்சிகோ நாட்டை மையமாக வைத்து உலகில் பல நாடுகளில் குளிர்பானம் மற்றும் ரீடைல் நிறுவனமாகும். FEMSA மெக்சிகோ நாட்டின் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ் Heineken நிறுவனத்தில் வாங்கிய தகவலை நெதர்லாந்து பங்குச்சந்தையில் Heineken ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்தது, இதேபோல் FEMSA பில் கேட்ஸ்-க்கு 10.8 மில்லியன் பங்குகளை விற்பனை செய்த விஷயத்தை மெக்சிகோ பங்குச்சந்தையில் தெரிவித்தது.
ரெட்டிட் தளப் பதிவு
2018 ஆம் ஆண்டு ரெட்டிட் தளத்தில் பில் கேட்ஸ் Ask Me Anything என்ற சாட்டில் தான் பீர் குடிப்பதை விரும்புவது கிடையாது என்றும், ஆனால் பேஸ்பால் போன்ற விளையாட்டு போட்டிகளின் போது மக்களோடு மக்களாக வைப்-ல் கலக்க வேண்டும் என்பதற்காக லைட் பீர் குடிப்பது வழக்கம் என்றும் இதனால் பீர் பிரியர்களைத் தன்னை மன்னிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் பில் கேட்ஸ்.
பில் கேட்ஸ் - எலான் மஸ்க்
ஆனால் இதுக்குறித்துப் பில் கேட்ஸ் தரப்பில் இருந்து எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. பில் கேட்ஸ் 2023 ஆம் ஆண்டு முதல் தனது வாழ்க்கை, பணிகள், நடைமுறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்தார். கடந்த ஆண்டுப் பில் கேட்ஸ் - எலான் மஸ்க் மத்தியிலான பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்தது மறக்க முடியாது. ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி வேகமாக வளர்ந்து வருகிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications