2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் ஜூலை 24 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கினாலும், ஜூலை 26ஆம் தேதி நடந்த ஓப்பனிங் செர்மனி நிகழ்ச்சி தான் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பல சர்ச்சைகள் உடன் அதிரடி காட்டியது. ஜூன் 30ஆம் தேதி வரையில் நடந்த போட்டிகளில் இந்தியா 2 வெண்கல பதக்கம் வாங்கி உலக தரவரிசையில் 28வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு முதல் இடத்திற்கு சீனா மற்றும் ஜப்பான் கடுமையாக போட்டி நடந்து வருகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பல சம்பவங்கள் நடந்தாலும், பலரையும் கவனிக்க வைத்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் மருமகனான நயல் நசார், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் எகிப்து நாட்டின் சார்பாக குதிரைப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது தான்.

33 வயதான நயல் நசார், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸின் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸை திருமணம் செய்து கொண்டார். இருவரும் குதிரைப் போட்டி விளையாட்டில் ஈடுப்பட்டதன் மூலம் நட்பு ஏற்பட்டு பின்னர் காதல் மலர்ந்து, திருமணம் செய்துக்கொண்டனர்.
நயல் நசார் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொண்டது போட்டிக்கு மாமியார் மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "ஒலிம்பிக் போட்டிகளில் உங்களைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், நயல் நசார். உங்களுக்கு என்னுடைய சப்போர்ட் எப்போதும் இருக்கும் " என்று பதிவிட்டுள்ளார்.
நயல் நசார் ஒரு குதிரை வீரர் (Professional Equestrian) ஆவார், தனிநபர் குதிரை குதித்தல் போட்டியில் கலந்துகொள் பாரீஸ்-க்கு வந்துள்ளார். 2024 ஒலிம்பிக்கில் குதிரைப் போட்டிகள் தனிநபர் மற்றும் அணிப் பிரிவில் மூன்று விதமாக நடத்தப்படுகிறது, டிரஸ்ஸேஜ், எவெண்டிங் மற்றும் ஜம்பிங் ஆகிய பிரிவுகள் நடத்தப்பட உள்ளது.

இது நசாருக்கு முதல் ஒலிம்பிக் போட்டி அல்ல. அவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் எகிப்து நாட்டிற்காக பங்கேற்றார், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். குதிரை சவாரி மீதான அவரது ஆர்வம் சிறு வயதிலேயே தொடங்கியது.
ஐந்து வயதில் குதிரை சவாரி செய்யத் தொடங்கிய அவர், பத்து வயதில் குதிரை குதித்தல் போட்டியில் கலந்துக்கொள்ள தொடங்கினார். சிகாகோவில் பிறந்து குவைத்தில் வளர்ந்த நயல் நசார், இந்த விளையாட்டில் திறமையான போட்டியாளராக உள்ளார்.
நயல் நசார் மற்றும் ஜெனிஃபர் கேட்ஸ் 2017 ஆம் ஆண்டு டேட்டிங் செய்யத் தொடங்கி, 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2023 மார்ச் மாதத்தில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ஜெனிஃபர் கேட்ஸ் ஒரு குழந்தை நல மருத்துவர். மவுண்ட் சினாய்-ல் இகான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். அவரது லிங்க்டின் பக்கத்தின்படி, கொலோம்பியா பல்கலைக்கழகத்தின் மெயில்மேன் பொது சுகாதாரப் கல்லூரியில் ஆலோசனை குழு உறுப்பினராகவும் தற்போது உள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications